நெல்சன், லோகேஷ் மாதிரி கூட்டாக உட்கார்ந்து கதை யோசிக்கும் பழக்கம் எச் வினோத்துக்கு கிடையாது. தளபதி 69 கதைக்காக கேரளாவில் முகாம் இட்டு இருக்கிறார் வினோத். அங்கே உட்கார்ந்து தான் முழுக்கதையையும் எழுதி இருக்கிறார்.
தற்சமயம் இந்த படத்திற்கு இறுதியான ஒரு ஸ்கிரிப்ட் ரெடிபண்ணி விட்டதாகவும், அது விஜய் கேட்டது போல் நன்றாக வந்திருக்கிறது எனவும் தெரிவிக்கின்றனர். இந்த படத்தை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என விஜய் கட்டளையிட்டு இருக்கிறார். அதேபோல் படமும் இரண்டு மணி நேரம் போதும் என்கிறாராம்.
நச்சுன்னு தளபதி 69க்கு ரெடியான கதை
எப்பொழுதுமே ஒரு படம் முடிந்த பிறகு விஜய் ஓய்வுக்காக ஒரு மாதம் லண்டன் சென்று விடுவார் ஆனால் இப்பொழுது கோட் படத்தின் சூட்டிங் முடிந்தவுடனே இதில் கலந்து கொள்கிறார். இதுதான் அவர் கடைசி படமாக இருக்கும் என்று தெரிகிறது.
ஏற்கனவே விஜய்,ஹச் வினோத் படத்தை உறுதி செய்து எல்லா ப்ரீ புரொடக்சன் வேலைகளையும் செய்ய சொல்லி இருக்கிறார். அது மட்டும் இன்றி இந்த படத்தின் கதை இதுதான், இதைத்தான் நாம் பண்ண போகிறோம் என்றும் ஸ்கிரிப்ட் ரெடி பண்ண சொல்லி இருக்கிறார். அதன்படி செம கதை ரெடி பண்ணி இம்ப்ரஸ் பண்ணி இருக்கிறார் வினோத்
விஜய் கேட்டுக் கொண்டது போல் இது ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட படம். சங்கர் இயக்கிய அந்நியன் படத்தை போல் நியாயமான ஒருவராகவும், அநியாயத்தை கண்டு கொதித்து எழும் கதாபாத்திரமாய் விஜய் இதில் நடக்கிறார். இதனால் மக்கள் அவரை அரசியலுக்கு கொண்டு வருவது தான் தளபதி 69 கதையாம்.