வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஹன்சிகாவுடன் ரிசார்ட்டில் விடிய விடிய பார்ட்டி

போகன் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிறது. அர்விந்த்ஸ்வாமியும் ஜெயம் ரவியும் இணைந்து நடித்துள்ளனர். தனிஒருவன் காம்பினேஷன் இந்த படத்திலும் ஒர்க் அவுட் ஆனாலும், படம் போலீஸ் படம் என்பதால் வசூலில் திக்கித்திணறி உள்ளது.

ஓரளவு கலெக்ஷன் ஆனதுக்கே பார்ட்டி வைத்து கொண்டாடி உள்ளார்கள் நம்ம ஹீரோவும், ஹீரோயினும்.

ஜெயம்ரவிக்கும், இந்த படத்தின் ஹீரோயின் ஹன்சிகாவுக்கும் பத்திக்கிச்சுன்னு வேறு தகவல். ரவி தன் தோழிக்காக தன் நண்பர்களிடம் எல்லாம் வாய்ப்பு கேட்டு வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

கலெக்ஷன் இல்லையே என்று ஊரே சொல்லும்போது, இந்த ஹாலிவுட் காப்பி கதைக்கு சக்ஸஸ் பார்ட்டின்னு ஊரை கூட்டி, மீடியாவிடம் சொல்லி கொண்டாட வேண்டாம்ன்னு, ப்ரொடியூசர் ஈசிஆர் ரிசார்ட்டில் விடிய விடிய சக்சஸ் பார்ட்டி நடக்க, ஹன்சிகா உட்பட எல்லோரும் ஆஜர்.

Trending News