தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பப்ளி ஆன ஹீரோயினாக வலம் வந்ததன் மூலம் சின்ன குஷ்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் கதாநாயகியாக நடிப்பதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருக்கிறார்.
தற்பொழுது இவர் கொழுகொழுவென்று இருந்த தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். ஆனால் இவருடைய இந்த மாற்றம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் ஹன்சிகாவிடம் முன்பு இருந்த க்யூட்னஸ் இப்போ இல்லையே என அவருடைய வெறித்தனமான ரசிகர்கள் ஏங்கித் தவிக்கின்றனர்.
அத்துடன் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் பிகினி புகைப்படத்தில், ஒல்லிக்குச்சி உடம்பில் யாரோ வேற மாதிரி தெரிவது போலிருக்கிறது. எனவே இந்தப் புகைப்படத்தில் கவர்ச்சி ததும்புவதால் இதுவரை இவர் போட்ட மற்ற புகைப்படங்களை காட்டிலும் இந்த புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளையும் ஷேர்களையும் பெற்று வருகிறது.
எனவே உடல் எடையை குறைத்த பின் ஹன்சிகா எதிர்பார்த்ததுபோல் ஏகப்பட்ட படவாய்ப்புகளும் அவரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. தற்சமயம் ஹன்சிகா கைவசம் மகா, ரவுடி பேபி, விஜய் சந்தர் போன்ற படங்களும், இயக்குனர் கண்ணன் உடன் ஒரு படமும் என நான்கு படங்களை வைத்திருக்கிறார்.
![hansika-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2022/05/hansika-cinemapettai.jpg)
தமிழில் மட்டுமன்றி தெலுங்கில் பிசியாக இருந்து கொண்டிருக்கும் ஹன்சிகா, தற்போது பார்ட்னர், 105 மினிட்ஸ், மை நோம் சுருதி போன்ற படங்களில் கமிட்டாகியுள்ளார். இவ்வாறு ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருக்கும் ஹன்சிகா நடிப்பில் பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார்.
எனவே எதை செய்தால் படம் குவியும் என்பதை சரியாக புரிந்து கொண்டு அதை கச்சிதமாக செய்து கொண்டிருக்கும் ஹன்சிகா நடிக்கும் படங்கள் இனி வரும் நாட்களில் வரிசை கட்ட போகிறது.