வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஹர்திக் பாண்டியா – நடாஷா.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!

Hardik Pandya: நான்கு வருடங்களாக ஒன்றாக இருந்த நானும் என் மனைவி நடாஷாவும் ஒரு மனதாக பிரிக்கிறோம். நேற்று ஹார்திக் பாண்டியா இப்படி ஒரு பதிவை போட்டு தன்னுடைய விவாகரத்தை உறுதி செய்தார். கடந்த ஐபிஎல் போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே ஹார்திக் பாண்டியா தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியானது.

இதற்கு காரணம் அவருடைய மனைவி நடாஷா ஹார்திக் பாண்டியா உடன் இருந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்திலிருந்து நீக்கி இருந்தார். அது மட்டும் இல்லாமல் அம்பானி கல்யாணத்தில் ஹார்திக் பாண்டியா தனியாகத்தான் கலந்து கொண்டார்.

இதனால் இவர்களது விவாகரத்து ஓரளவுக்கு உறுதிபெற்ற நிலையில் தற்போது இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிவை வெளியிட்டு இருக்கிறார்கள். ஹார்திக் பாண்டியா செர்பிய அழகி நடாஷாவை கடந்த 2018 ஆம் ஆண்டு சந்தித்தார்.

2020 ஆம் ஆண்டு கடலுக்கு நடுவே சொகுசு கப்பலில் நடாஷாவுக்கு மோதிரம் அணிவித்து தங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் இருவருக்கும் கொரோனா லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து இரண்டு மாதத்தில் இருவரும் தங்களுடைய முதல் குழந்தையை எதிர்நோக்கி இருப்பதாக பதிவு விட்டிருந்தார்கள். 2023 ஆம் ஆண்டு கோடிக்கணக்கில் செலவு பண்ணி பிரம்மாண்டமாக மீண்டும் தன் மனைவி நடாஷாவை திருமணம் செய்தார் ஹர்திக் பாண்டியா.

இந்த தம்பதிகளுக்கு அகஸ்தியா என்னும் ஒரு மகன் இருக்கும் நிலையில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள்.

சக பெற்றோராக எங்கள் மகன் அகஸ்தியாவை நாங்கள் நன்றாக பார்த்துக் கொள்வோம் என ஹார்திக் பாண்டியா பதிவிட்டு இருக்கிறார். தற்போது இவர்கள் இரண்டு பேரின் தனிப்பட்ட சொத்து மதிப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி கார்த்திக் பாண்டியாவுக்கு 90 கோடிக்கு சொத்து மதிப்பு இருக்கிறது. மேலும் கடந்த ஐபிஎல் போட்டியில் இவர் 15 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். அதேபோன்று செர்பிய அழகி நடாஷாவுக்கு 21 கோடி அளவுக்கு சொத்து மதிப்பு இருக்கிறது.

Trending News