Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கால்ல விழாத குறையா கெஞ்சும் இயக்குனர் ஹரி.. ரத்னத்திற்காக எடுத்த புதிய முயற்சி ஜெயிக்குமா.?

கால்ல விழாத குறையா கெஞ்சும் இயக்குனர் ஹரி.. ரத்னத்திற்காக எடுத்த புதிய முயற்சி ஜெயிக்குமா.?

Director Hari : இயக்குனர் ஹரி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கிறது ரத்னம் படம். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் தான் தேர்தல் பிரச்சாரம் […]

Director Hari : இயக்குனர் ஹரி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கிறது ரத்னம் படம். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் தான் தேர்தல் பிரச்சாரம் படு பயங்கரமாக நடந்தது. அதில் வீடு வீடாக சென்று எவ்வாறு ஓட்டு கேட்டார்களோ அதேபோல் ரத்னம் படத்தை பார்க்க வாருங்கள் என ஹரியும் புதுச்சேரி முழுவதும் அலைந்த போட்டோக்கள் தான் இப்போது இணையத்தில் நிறைந்திருக்கிறது.

ரத்னம் படத்திற்காக இறங்கி வந்த ஹரி

hari-ratnam
hari-ratnam

விக்ரமுக்கு சாமி, சூர்யாவுக்கு சிங்கம் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை ஹரி கொடுத்திருந்தார். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான படம் தான் யானை. தனது மனைவியின் சகோதரர் அருண் விஜய்யை வைத்து எடுத்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

நாளை ரிலீஸாக உள்ள விஷாலின் ரத்னம்

ஆனால் இப்போது புதுவரவாக லோகேஷ், நெல்சன் போன்ற இயக்குனர்களின் படங்கள் தான் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் ஹரி, சுந்தர் போன்ற இயக்குனர்களின் படங்கள் வசூலில் பெரிய அளவில் லாபம் கொடுக்கவில்லை.

அதுவும் ஹரி இப்போது விஷாலை வைத்து ரத்னம் என்ற படம் எடுத்திருக்கிறார். விஷால் சமீபகாலமாகவே ட்ரோல் கன்டென்ட் ஆக தான் உலாவி வருகிறார். அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் கேலி, கிண்டலுக்கு தான் உள்ளாகி வருகிறது.

அதேபோல் ரத்னம் படமும் ஆகி விடக்கூடாது என்பதால் புதுச்சேரியில் உள்ள மார்க்கெட்டில் ஒவ்வொரு கடையாக ஏறி காலில் விழாத குறையாக ரத்னம் படத்திற்கு பிரமோஷன் செய்து வருகிறார் ஹரி. ரசிகர்கள் ஒருமுறை திரையரங்குக்கு வந்து பார்த்தால் கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும் என்று ஹரி முழு நம்பிக்கை இருக்கிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.