சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அந்த ஹீரோ பப்ளிசிட்டி பைத்தியம்னு தெரியாம போச்சே.! தலையை கொடுத்து மாட்டியதால் விழி பிதுங்கும் ஹரி

Director Hari: இயக்குனர் ஹரி பல வருடம் கழித்து யானை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருந்தார். அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான இந்த படம் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதே சூட்டுடன் அடுத்த படத்தையும் எடுத்து விட வேண்டும் என்று இப்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

ஆனால் ஏன்டா இந்த ஹீரோவை போட்டோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹரி சோதனையை சந்தித்து வருகிறாராம். அதாவது பப்ளிசிட்டிக்காக அந்த ஹீரோ அக்கப்போரு பண்ணிக் கொண்டிருக்கிறார். பொதுவாக ஹரியை எடுத்துக் கொண்டால் கிராமம் சார்ந்த கதைகளத்தை தான் படமாக எடுத்து வருகிறார்.

அந்த வகையில் அவருடைய இயக்கத்தில் வெளியான சாமி, சிங்கம் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இப்போது விஷாலை வைத்து தான் ஹரி ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிராமப்புறங்களில் நடந்து வருகிறதாம். அங்கு மக்களோடு மக்களாகவே விஷால் மாறிவிட்டாராம்.

அதோடு மட்டுமல்லாமல் அங்கு உள்ள கிராமவாசிகளுக்கு தண்ணீர் டேங்க் கட்டிக் கொடுத்துள்ளாராம். இது தவிர அவர்களுக்கு என்னென்ன தேவை இருக்கிறது என்பதை கேட்டு இப்போது செய்து கொண்டிருக்கிறாராம். மேலும் இதெல்லாம் விஷால் பப்ளிசிட்டிக்காக தான் செய்து வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே ஆர்கே நகர் தேர்தல் மற்றும் நடிகர் சங்க தேர்தல் என விஷால் படம் காட்டி இருக்கிறார். போதாக்குறைக்கு நடிகர் சங்கம் கட்டிடம் முடித்த பிறகு தான் தாலி கட்டுவேன் என்று வீர வசனங்களை அள்ளி தெளித்திருந்தார். இப்போதும் விஷாலுக்கு அரசியல் ஆசை இருப்பதால் தான் இவ்வாறு செய்து வருகிறார்.

சமீபத்தில் கூட விஜய் அரசியல் வருகைக்காக மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் பல நல திட்டங்களை செய்து வரும் நிலையில் தளபதியை பாலோ செய்யலாம் என்று நினைத்து விஷால் இவ்வாறு செய்து வருகிறார். மேலும் விஷால் இவ்வாறு மக்களுக்கு உதவி செய்து கொண்டிருப்பதால் படப்பிடிப்பு சரியான நேரத்தில் எடுக்க முடியாமல் ஹரி திணறி வருகிறாராம்.

Trending News