திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வெற்றிமாறன் கேட்டும் டைட்டிலுக்கு முடியாது என கூறிய ஹரி.. தனுஷ் படத்திற்கு வந்த சிக்கல்

Vetrimaaran-Dhanush: வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளிவந்த அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. அதனாலயே இவர்களின் காம்போ வெற்றி கூட்டணியாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் வெற்றிமாறன் ஒரு டைட்டிலுக்காக இயக்குனர் ஹரியிடம் கெஞ்சியது ஆச்சரியமாக தான் இருக்கிறது.

அதாவது ஆடுகளம் உருவாகும் சமயத்தில் அந்த படத்திற்கு சண்டக்கோழி என்ற டைட்டில் தான் வைப்பதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் விஷாலின் சண்டக்கோழி படம் ஷூட்டிங் தொடங்கப்பட்டு நடந்து வந்ததால் சேவல் என்ற பெயரை வைக்கலாம் என வெற்றிமாறன் முடிவு செய்திருக்கிறார்.

Also read: கழுதை தேஞ்சு கட்டெறும்பாயிடுச்சு.. பணத்தாசையால் அதல பாதாளத்திற்கு சென்ற தனுஷ் பட ஹீரோயின்

அதைத்தொடர்ந்து அந்த பெயரை பதிவு செய்வதற்காக சென்றபோது ஏற்கனவே இயக்குனர் ஹரி அதை ரெஜிஸ்டர் செய்துவிட்டார் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் ஏமாற்றம் அடைந்த வெற்றிமாறன் ஹரிக்கு போன் செய்து இந்த டைட்டில் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் ஹரி அந்த டைட்டிலை கோவிலில் வைத்து பூஜை செய்து முடிவு செய்தோம். இல்லையென்றால் உங்களுக்கு கொடுத்திருப்பேன் என்றும் இப்போது கொடுக்க முடியாது என்றும் சென்டிமென்ட்டாக மறுத்திருக்கிறார். இதனால் சோர்ந்து போன வெற்றிமாறன் என்ன செய்வது என்று யோசித்து இருக்கிறார்.

Also read: ஹீரோ மெட்டீரியலுக்கான லுக் இல்லாத 5 நடிகர்கள்.. கொஞ்சம் கூட செட்டே ஆகாதுன்னு நினைத்த தனுஷ்

அதைத்தொடர்ந்து பல கலந்தாலோசனைகளுக்கு பிறகு ஆடுகளம் என்ற டைட்டிலை வைக்கலாம் என்று ஏக மனதாக பேசி இருக்கிறார்கள். இதை கேட்ட தனுஷும் இந்த தலைப்பு பக்காவாக பொருந்தி இருக்கிறது என கூறி இருக்கிறார்.

இருந்தாலும் வெற்றிமாறனுக்கு ஒரு நெருடல் இருந்து கொண்டே தான் இருந்ததாம். அதன் பிறகு படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரியும். அது மட்டுமல்லாமல் ஆறு தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது. இப்படி பல சிக்கல்களை ஆடுகளம் சந்தித்திருக்கிறது என்பது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது.

Also read: வேகம் எடுக்கும் தனுஷ் 50.. இவ்வளவு நடிகர்களா?. தெறிக்க விட்ட சம்பவம்

Trending News