திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

LCU போல HCU வா.? லோகேஷுக்கு முன்பே சிங்கம் படத்தில் ஹரி போட்ட திட்டம்

Dirctor Hari : தமிழ் சினிமாவில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற ஒரு புதிய பரிமாணத்தை இயக்குனர் லோகேஷ் கொண்டு வந்துள்ளார். தன்னுடைய முந்தைய படங்களின் தொடர்ச்சியை அடுத்த படங்களில் தொடர்பு படுத்தி வருகிறார்.

இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கைதி, விக்ரம், லியோ படங்களை லோகேஷ் தொடர்புபடுத்தி எடுத்திருந்தார்.அடுத்ததாக லோகேஷின் விக்ரம் 2 மற்றும் கைதி 2 படங்கள் உருவாக இருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் ஹரி இப்போது ரத்னம் படம் இயக்கி உள்ளார். விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளதால் ஊடகங்களுக்கு ஹரி பேட்டி கொடுத்து வருகிறார்.

துரைசிங்கத்தை சந்திக்கும் ஆறுச்சாமி

அப்போது பேசிய ஹரி லோகேஷுக்கு முன்னதாகவே ஹரி சினிமாடிக் யுனிவர்ஸ் கொண்டுவர இருந்தாராம். சிங்கம் படம் எடுக்கும் போது தான் ஹரிக்கு இந்த எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. சிங்கம் 3 கிளைமாக்ஸ் காட்சியில் துரைசிங்கம் குடும்பத்துடன் ஆறுச்சாமி குடும்பம் எதர்சையாக சந்திப்பது போல் எடுக்க நினைத்தேன்.

அப்போது ஆறுச்சாமி பெருமாள் பிச்சையை பற்றியும், துரைசிங்கம் மயில்வாகனம் பற்றியும் பேசுவது போல் காட்சி அமைக்க நினைத்தாராம். ஆனால் அப்போது இதுபோன்று எடுக்க நிறைய பேரிடம் அனுமதி வாங்க வேண்டி இருந்ததாம்.

இதற்கே நிறைய நேரம் தேவைப்படுவதால் படம் காலதாமதம் ஏற்படும் என்பதால் அதன் பின்பு அதைப்பற்றி யோசிக்கவில்லை. இந்த விஷயத்தை நான் சூர்யாவிடம் கூட சொன்னதில்லை என ஹரி கூறி இருக்கிறார்.

ஆனால் இப்போது அதே விஷயத்தை லோகேஷ் செய்திருப்பது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக ஹரி தெரிவித்துள்ளார்.

Trending News