வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தூங்கு மூஞ்சி அஸ்வினை மிஞ்சும் ஹரிஷ் கல்யாண்.. சிரிப்பாய் சிரிக்கும் கோடம்பாக்கம்

சினிமாவில் சில நடிகர்கள் சத்தமே இல்லாமல் படங்களை நடித்து கொண்டு வருவார்கள். அப்படி அவர்களின் படங்கள் ஏதேனும் ஒன்று ஹிட்டாகிவிட்டால், ரசிகர்களிடம் பிரபலமாவது , தொடர் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிப்பது என நல்ல நடிகர்களாக உருவெடுப்பர். இன்னும் சில நடிகர்களோ எவ்வளவு தான் படங்களில் நடித்தாலும் மேலே எற முடியாமல் தவித்து வருவார்கள்.

அப்படிபட்ட நடிகர்களுக்கு லாட்டரி அடித்தது போல் அதிர்ஷ்டம் வந்து அவர்களே எதிர்பார்க்காத வகையில், நல்ல இயக்குனர்களின் கூட்டணியில் படங்களை பண்ணிவிட்டு முன்னேறுவார்கள். அப்படி முன்னேறி கொண்டிருக்கும் நடிகர் தான் ஹரிஷ் கல்யாண். மலையாளத்தில் வெளியான சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தில் நடித்து அறிமுகமான ஹரிஷ் கல்யாண், தமிழில் பொறியாளன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

Also Read: சத்தமில்லாமல் காய் நகர்த்திய ஹரிஷ் கல்யாண்.. கடுப்பில் முன்னாள் காதலிகள்

மேலும் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்த இவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்த பியார் பிரேமா காதல் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தத் திரைப்படம் வெற்றிப் பெற்ற நிலையில், தொடர் படங்களில் நடித்து வந்தார். ஆனால் தற்போது வரை பெயர் சொல்லக்கூடிய எந்த ஒரு படத்திலும் ஹரிஷ் கல்யாண் நடிக்கவில்லை.

அந்த வகையில் தற்போது தன்னிடம் கதை கூற வரும் இயக்குனர்களிடம் கண்டிஷன் போட்டு சற்று ஓவராக ஹரிஷ் கல்யாண் நடந்துக்கொள்கிறார் என்ற செய்தி இணையத்தில் உலா வருகின்றன. ஹரிஷ் கல்யாண் தற்போது கிரிக்கெட் வீரரும், முன்னாள் இந்திய அணியின் கேப்டனாகவும் திகழ்ந்த தோனி தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். டோனி என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா உள்ளிட்டோர் நடிக்க உள்ள இப்படத்தின் பூஜை அண்மையில் நடைப்பெற்றது.

Also Read: நெஞ்சுக்கு நீதி பிரபலத்துடன் இணையும் ஹரிஷ் கல்யாண்.. எதிர்பாராத கூட்டணி

இந்த பூஜையில் டோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனி கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இப்படத்தில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாணுக்கு கொஞ்சம் ஆட்டம் ஜாஸ்தியாக உள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் விமர்சித்துள்ளனர். தன்னிடம் கதை கூற வரும் இயக்குனர்கள் கட்டாயம் இரண்டு படங்களையாவது ஏற்கனவே இயக்கியிருக்க வேண்டும் என்றும் அதில் ஒரு படமாவது நல்ல விமர்சனங்களை பெற்றிருக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டுள்ளார்.

இவரது இந்த கண்டிஷனை கேள்விப்பட்ட கோடம்பாக்கம் சிரிப்பாய் சிரித்து வருகிறதாம். முதலில் இவரது படங்கள் நல்ல விமர்சனங்களை பெறட்டும், அதன் பின்பு இவர் மற்ற இயக்குனர்களுக்கு கண்டிஷன் போடட்டும் என ஹரிஷ் கல்யாணின் மூக்கை உடைக்கும் வகையில் இவரை கலாய்த்து தள்ளி வருகின்றனர். ஒழுங்காக தனக்கு கிடைத்த படங்களை நன்றாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பெறட்டும் எனவும் ஹரிஷ் கல்யானுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.

Also Read: தளபதி வேண்டாம், பிக் பாஸ் நடிகர் போதும்.. திருமணத்திற்க்கு பின் ஹரிஷ் கல்யாணுக்கு அடித்த ஜாக்பாட்

Trending News