ஹரிஷ் கல்யாண் நடிக்க வந்து 14 வருடங்கள் ஆகிறது கிட்டதட்ட 20 படங்கள் நடித்து முடிச்சாச்சு ஆனால் சொல்லிக் கொள்ளும்படி மூன்றே படங்கள் தான் அவருக்கு பெயர் வாங்கி தந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ஹரிஷ் கல்யாண். சாக்லேட் பாய் மாதிரி இருந்ததால் இவருக்கு ரசிகைகள் கூட்டம் பெருகியது.
சிந்து சமவெளி படத்திற்கு பின்னர் 5 ஆண்டுகள் சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் வரவில்லை. அதன் பின் கசடதபர, பார்க்கிங், லப்பர் பந்து போன்ற படங்கள் இவருக்கு பெயர் வாங்கித் தந்தது. சமீபத்தில் வெளிவந்த லப்பர் பந்து படத்தால் இவருக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டு என்று கொட்டி வருகிறது.
எட்டு கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படம் 60 கோடிகள் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. ஹரிஷ் கல்யாண்க்கு மீண்டும் சினிமா கேரியர் கொடி பறக்கத் தொடங்கியது. இந்த படத்தின் மூலம் 30 லட்சம் சம்பளம் வாங்கி வந்த இவர் ஒரு கோடிகள் வரை சம்பளத்தை உயர்த்தி விட்டார். அடுத்தடுத்து படங்கள் இவருக்கு குவிந்த வண்ணம் இருக்கிறது.
கடந்த ஓராண்டுகளாக இவர் டீசல் என்ற ஒரு படத்தில் நடித்து வந்தார் ஆனால் அது லப்பர் பந்து படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு கிடப்பில் போடப்பட்டது . லப்பர் பந்து கொடுத்த பூஸ்டால் இப்பொழுது டீசல் படம் டேக் ஆப் ஆகி வருகிறது. அடுத்தபடியாக ஹரிஷ் கல்யாண்க்கு அந்த படம் ரிலீஸ் லிஸ்டில் இருக்கிறது.
இப்பொழுதே அந்த படத்தின் “பீர்” பாடல் செம ஹிட் அடித்துள்ளது. இதுவரை யூடியூபில் 16 மில்லியன் வாடிக்கையாளர்கள் அந்த பாடலை பார்த்து ரசித்துள்ளனர். இப்பொழுது சமூக வலைத்தளங்களில் எங்கே பார்த்தாலும் டீசல் படத்தின் “பீர்” பாடலைத் தான் ரீல்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது செம ஹிட் அடித்து வருகிறது.