Parking Twitter Review : அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் இன்று பார்க்கிங் படம் வெளியாகி இருக்கிறது. இந்த சூழலில் பார்க்கிங் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் இந்த படத்திற்கான ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். அந்த வகையில் பார்க்கிங் பிரச்சனையால் நடக்கும் யுத்தம் என்றும், இரண்டு பேருக்கும் ஈகோவால் நடக்கும் போர்க்களம் தான். மேலும் இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் எம்எஸ் பாஸ்கர் கொடுத்துள்ளனர்.

Also Read : எலியும் பூனையுமாய் ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர்.. பட்டையை கிளப்பும் பார்க்கிங் ட்ரெய்லர்
முதல் படத்திலிருந்து அபாரமான கதைக் களத்தையும், வலுவான கருத்தையும் இயக்குனர் ராம்குமார் கொடுத்திருக்கிறார். சாம் சிஎஸ் படத்திற்கு எது தேவையோ அதற்குக் கேற்றார் போல் இசையமைத்திருக்கிறார். மேலும் படத்திற்கு எது தேவையோ அதை பக்காவாக முழு படக்குழுவும் கொடுத்திருக்கிறது.

மேலும் முதல் பாதி நன்றாக உள்ளது. மேலும் படத்தின் கதையை புரிந்து கொள்ள நேரம் எடுப்பதாகவும் அதன் பிறகு இருக்கக் கூடியதாகவும் உள்ளது. மேலும் இடைவெளியில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்எஸ் பாஸ்கர் இடையே ஆன மோதல் அற்புதமாக அமைந்துள்ளதாக ரசிகர் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

Also Read : கீரியும், பாம்புமாய் சண்டை போடும் ஹரிஷ் கல்யாண், MS பாஸ்கர்.. பார்க்கிங் எப்படி இருக்கு? ரிவ்யூ ஷோ விமர்சனம்