புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நிலவரம்.. ஆட்சியமைக்கப் போவது யார்?

நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் 3 அடுக்கு பாதுகாப்புடன் இதன் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகின்றன.

ஹரியானா மாநிலம்

ஹரியானா மாநிலத்தில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஒரேகட்டமாக நடைபெற்ற இத்தேர்தலில் 89 தொகுதிகளில் பாஜக தனியாகப் போட்டியிட்டது. பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி 89 தொகுதிகளில் போட்டியிட்டன. டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி, ஹரியானா தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நிலையில் அனைத்து இடங்களிலும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகின்றன

குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சி இத்தேர்தலில் 1.69 சதவீதம் ஓட்டுகளும், அதேபோல் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி இத்தேர்தலில் 1.67 சதவீதம் வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0.25 சதவீதம் ஓட்டுகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.01 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகின்றன.

மதிய நேர நிலவரப்படி ஹரியானாவில் பாஜக 49 இடங்களிலும், காங்கிரஸ் அட்சி 35 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 இடங்களிலும், மற்ற கட்சியினர் 2 இடங்களில் முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் காங்கிரஸ் – பாஜக இடையே கால முதலே போட்டி பலமாக இருந்த நிலையில் காலை முதல் தற்போது வரை பாஜக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளது. ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனையும் காங்கிரஸ் வேட்பாளருமான வினேஷ் போகத் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

எனவே ஏற்கனவே 2 முறை அம்மாநிலத்தின் ஆட்சியில் இருந்த பாஜகவே 3 வது முறை ஆட்சியைப் பிடிக்கும் என தெரிகிறது. இதனால் பாஜகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், காங்கிரஸூக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இத்தேர்தலில் பாஜகவை விட {39.66 சதவீதம்} அக்கட்சி 40.03 சதவீத ஓட்டுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர்

அதேபோல் ஜம்மு காஷ்மீரில் 90 சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கிழமை கட்டமாக நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய நிலையில் வெற்றி நிலவரம் வெளியாகி வருகிறது. இதில், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி 22.99 சதவீத வாக்குகள் பெற்றுள்ள நிலையில், மொத்தமுள்ள தொகுதியில் 49 இடங்களில் முன்னிலையில் உள்ளன. பாஜக 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும், மற்ற கட்சிகள் 11 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இங்கு பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிகிறது. ஆனால், பாஜக தன் ஆட்சியைத் தக்க புதிய கூட்டணியை உருவாக்கலாம் எனவும் இதற்கான பேச்சுவார்த்தையில் அக்கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் பாஜக குறைந்த வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுவும் கூட்டணி கட்சிகளால் பாஜக மீண்டும் ஆட்சியமைத்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் இரண்டு மாநில சட்டசபைத் தேர்தலிலும் கடும் போட்டி நிலவிய நிலையில் ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் எனவும், ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

- Advertisement -spot_img

Trending News