வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

முதன்முதலாக தேசிய விருது வாங்கிய இசையமைப்பாளர்.. இசைஞானி, ஏ ஆர் ரகுமானுக்கெல்லாம் இவர் தான் குரு

தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய மெல்லிசையால் கட்டி போட்ட பெருமை இளையராஜாவுக்கு உண்டு. 80 காலகட்டத்தில் இவர் இசையமைக்காத திரைப்படங்களே கிடையாது. அந்த அளவுக்கு தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர் இளையராஜா.

இவரை தொடர்ந்து இளைஞர்களை தன்னுடைய துள்ளல் இசையின் மூலம் ஆட வைத்தவர் ஏ ஆர் ரகுமான். இன்றுவரை இவருடைய இசைக்கு ரசிகர்கள் மயங்கி கிடக்கின்றனர். ஆஸ்கர் விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கும் இவர் இந்திய அளவில் பிரபலமாக இருக்கிறார்.

Also read : சிவாஜிக்கு பட்ட நன்றி கடனால் எம்ஜிஆரை ஒதுக்கிய தயாரிப்பாளர்.. வழிவிட்டு வாழவைத்த புரட்சித்தலைவர்

இப்படி எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் தமிழ் சினிமாவுக்கு முதன்முதலாக தேசிய விருதை வாங்கி கொடுத்த பெருமை ஒருவருக்கு இருக்கிறது. 1967 ம் ஆண்டு வெளிவந்த கந்தன் கருணை என்ற திரைப்படத்திற்காக கே வி மகாதேவன் அவர்கள் முதன்முதலாக தேசிய விருதைப் பெற்றார்.

சிவாஜி, ஜெமினிகணேசன், சிவக்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடலும் ரசிகர்களை கவர்ந்தது. அந்த வகையில் அப்படம் தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரும் பெருமையை தேடிக் கொடுத்தது.

Also read : வாலியை கோவம் வர காக்க வைத்த பாக்கியராஜ்.. பொறுமையை சோதிப்பதில் காரணம் இருக்கு

இதை வைத்து பார்க்கும் பொழுது இப்போது கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்களுக்கு எல்லாம் கேவி மகாதேவன் தான் முன்னோடியாக இருக்கிறார். இவருக்குப் பிறகு 1985 ஆம் ஆண்டு சிந்து பைரவி படத்திற்காக இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்தது.

அதைத்தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் ரோஜா, மின்சார கனவு, கன்னத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை போன்ற படங்களுக்காக தேசிய விருது பெற்றார். மேலும் 2020 ஆம் ஆண்டு வெளியான சூரரை போற்று திரைப்படத்திற்காக ஜிவி பிரகாஷ் குமாருக்கு தற்போது சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also read : மதிக்காத இளையராஜாவிடம் பாக்யராஜ் பண்ணிய தாஜா.. உச்சகட்ட பொறாமையில் இசை ஞானி

Trending News