நடிகர் அஜித் தற்போது தென்னிந்தியாவின் மாஸ் நடிகராக வலம் வந்து ரசிகர்களை 20 ஆண்டுகளாக தன் நடிப்பால் கொள்ளைக் கொண்டுள்ளார். இவரின் ஆரம்பக்கால சினிமா வாழ்க்கையில் இவர் பட்ட அவமானங்கள், கஷ்டங்கள் ஏராளம். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் காலடி எடுத்து வைத்த அஜித்தின் ஆரம்பக் கால படங்கள் ரிலீசாவதே பெரும் போராட்டமாக அமைந்தது எனலாம்.
அப்படிப்பட்ட படத்தில் ஓன்று தான் 1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி திரைப்படம் அஜித்தின் திரும்பிப்பார்க்கும் வகையில் அவருக்கு அமைந்தது. இந்நிலையில் இப்படத்திற்கு பின், அஜித் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் 1993 ஆம் ஆண்டு பிரேம புஸ்தகம் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்தார். இப்படம் பட்டித் தொட்டியெங்கும் வரவேற்க்கப்பட்ட நிலையில் ஆந்திர மாநிலத்தின் உயரிய விருதான 3 நந்தி விருதுகளை பெற்றது.
Also Read : யுனிவர்சல் கூட்டணிக்காக அஜித்தை டீலில் விட்ட த்ரிஷா.. இயக்குனர் மேல் இருக்கும் அவநம்பிக்கை
தெலுங்கு இயக்குனர் கோல்லுபுடி மாருதிராவ் இயக்கத்தில் வெளியான இப்படத்தை முதன் முதலில் இவரது மகன் கோல்லுபுடி ஸ்ரீநிவாஸ் இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்திருந்த தருவாயில், கடலில் புகைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கிய இயக்குனர் கோல்லுபுடி ஸ்ரீநிவாஸ் கடலில் மூழ்கி உயிரிழந்தார். இதன் காரணமாக இப்படத்தை தன் மகனுக்காக இப்படத்தை கோல்லுபுடி மாருதிராவ் எடுக்க முயற்சி செய்தார்.
அச்சமயத்தில் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் படமாக்கி கொடுக்குமாறு இயக்குனர் பாக்யராஜிடம் கோல்லுபுடி மாருதிராவ் வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்போது அவரது வேண்டுகோளை ஏற்ற பாக்யராஜ் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்துக் கொடுத்துவிட்டு சென்றாராம். அன்று பாக்யராஜ் மட்டும் இந்த உதவியை செய்யாமல் இருந்திருந்தால் இன்று அஜித்திற்கு அப்படிப்பட்ட சூப்பர்ஹிட் படம் கிடைத்திருக்காது.
Also Read : விஜய்க்கும், அஜித்துக்கும் இதுதான் வித்தியாசம்.. துணிவை உதாசீனப்படுத்தும் வாரிசு படக்குழு
மேலும் கோல்லுபுடி மாருதிராவும் இப்படத்தை பாதியிலேயே கைவிட்டிருப்பார் . அந்த படம் தான் அஜித்தின் வாழ்க்கையை திருப்பி போட்ட படமாகும். இத்திரைப்படத்தை தொடர்ந்தே இயக்குனர் வசந்த் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ஆசை படம் உருவாக்கப்பட்டு வெற்றிபெற்றது. இப்படத்திற்கு பின்னரே அஜித்தின் கேரியர் தமிழ் சினிமாவில் உயர்வு பெற்றது.
இயக்குனர் பாக்யராஜ் எத்தனையோ நடிகர்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார், முக்கியமாக இயக்குநர்களை அதிகமாக அறிமுகப்படுத்தியவர். ஆனால் இவருக்கே தெரியாமல் அஜித்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கு காரணமாய் இருந்துள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
Also Read : என்ன செய்வது என்று தெரியாமல் திணறிய எம்ஜிஆர்.. கை கொடுத்து காப்பாற்றிய பாக்யராஜ்