Actor Ajith: அஜித்தை பற்றி சொல்வதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. ஆனால் இப்போதும் கூட அவருடைய தைரியமான ஒரு விஷயத்தை பலரும் வியந்து பேசுவதுண்டு. அந்த சம்பவம் தான் ரஜினியையும் ஆச்சரியப்படுத்தி எழுந்து நின்று கைதட்ட வைத்தது.
அதாவது கடந்த 2010 ல் கலைஞருக்காக ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் திரை கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய அஜித் நடிகர்களை விழாவிற்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தி மிரட்டுகிறார்கள் ஐயா. நீங்கள் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என கூறியிருந்தார்.
உண்மையில் இது அங்கிருந்த பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. ஆனால் ரஜினி எழுந்து நின்று கைதட்டிய உடனே மற்றவர்களும் அதில் இணைந்து கொண்டனர். இந்த சம்பவம் தான் இப்போது வரை அஜித்தின் தைரியத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
அவர் அன்று அப்படி பேசியதால்தான் இப்போது அவரைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு சகாப்தத்திற்கு வழிவகுத்த அந்த சம்பவம் மீண்டும் திரும்புமா என்ற ஒரு கேள்வி இப்போது அனைவருக்கும் இருக்கிறது. ஏனென்றால் விரைவில் கலைஞர் நூற்றாண்டு விழா விமரிசையாக நடைபெற இருக்கிறது.
Also read: அஜித்தின் 63வது பட இயக்குனர் பிரபுவின் மருமகன் தான்.. 100% உறுதி செய்த சுரேஷ் சந்திரா
அதில் அஜித் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்தில் அஜித்தை மிரட்டியது யார் என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழ தான் செய்கிறது. அதன்படி அப்போது பெப்சி அமைப்பின் சேர்மனாக இருந்த குகநாதன் தான் அஜித்தை மிரட்டி இருக்கிறார்.
ஆனால் இதை அஜித் பகிரங்கமாக கூறுவார் என்று அவரே எதிர்பார்த்து இருக்க மாட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகும் கூட அஜித் சில மிரட்டல்களை சந்தித்து இருக்கிறார். அப்போது சூப்பர் ஸ்டார் தான் அவரை கலைஞரிடம் அழைத்துச் சென்று பிரச்சனையை முடித்து இருக்கிறார். இப்படி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது பத்திரிக்கையாளர் வி கே சுந்தர் வெளிப்படையாக கூறியுள்ளார்.