செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

வெண்ணிறாடை மூர்த்தியால் கெட்டு குட்டிச்சுவராய் போன சினிமா.. டபுள் மீனிங் காமெடி பண்ணாத ஒரே நடிகர்

சாதாரணமாக ஒரு படத்தில் நகைச்சுவை என்பது மிக முக்கியமானதாக உள்ளது. ஆனால் மற்றவர்களை சந்தோஷப் படுத்துவதற்காக சிலரை புண்படுத்தும் விதமான நகைச்சுவை வைப்பது மிகவும் கொடியது. அதிலும் சிலர் இரட்டை அர்த்தம் உடைய நகைச்சுவையை பயன்படுத்தி வருகிறார்கள்.

வெண்ணிறாடை மூர்த்தி, எஸ் எஸ் சந்திரன் போன்ற அந்த காலத்து நடிகர்கள் முதல் சந்தானம், சூரி என தற்போதுள்ள நடிகர்களும் டபுள் மீனிங் வசனங்களை படங்களில் பேசிவருகிறார்கள். மேலும் அது போன்ற வசனங்களை தான் ரசிகர்களும் அதிகம் விரும்பி கேட்கின்றனர்.

Also Read : துணை கதாபாத்திரத்தில் ஹீரோக்களை மிஞ்சிய 6 நடிகர்கள்.. 64 வயதிலும் சாதித்துக் காட்டிய MS பாஸ்கர்

ஆனால் அந்தக் காலத்தில் இருந்தே சினிமாவில் உள்ள ஒரு நடிகர் தற்போது வரை இதுபோன்று வசனங்கள் பேசியதில்லையாம். தமிழ் சினிமாவில் ஆல்-ரவுண்டராக உள்ள அந்த நடிகர் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரை நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பல பரிமாணங்களை கொண்டுள்ள எம்எஸ் பாஸ்கர் தான் அந்த நடிகர். சமீபகாலமாக எம்எஸ் பாஸ்கரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 8 தோட்டாக்கள் படத்தில் சிறந்த நடிப்பை வெளிகாட்டி அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தார்.

Also Read : MS பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா திருமண வீடியோ.. அசத்தலாக வந்த விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் சினிமா பிரபலங்கள்

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னிப் பெடல் எடுக்கக் கூடியவர். சின்னத்திரையில் சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் எம்எஸ் பாஸ்கரின் பட்டாபி கதாபாத்திரம் யாராலும் மறக்க முடியாது. இந்நிலையில் தற்போது வரை தொடர்ந்து படங்களில் நடித்து வரும் எம்எஸ் பாஸ்கர் இரட்டை அர்த்தமுள்ள வசனங்களை பேசியதே கிடையாதாம்.

ஏனென்றால் நண்பர்கள் அல்லது உறவுகளை கொச்சைப் படுத்தி எடுக்கும் காமெடியில் அவருக்கு உடன்பாடு இல்லையாம். இவ்வாறு கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் சில விஷயங்களை செய்ய மாட்டேன் என எம் எஸ் பாஸ்கர் வரையறுத்து வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் தற்போது உள்ள பல இளம் நடிகர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்.

Also Read : எந்த கதாபாத்திரம் நாளும் வாழ்ந்து காட்டிய 7 நடிகர்கள்.. எம்எஸ் பாஸ்கரை ஓவர்டேக் செய்த நடிகர்

Trending News