வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரெட் ஜெயண்ட்க்கு பினாமி இவர் தான்.. உதயநிதியை வச்சு செய்யும் பிரபலம்

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் அபரிவிதமான விதமான வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களை உதயநிதி தான் விநியோகம் செய்து வருகிறார். பெரும்பாலான தயாரிப்பாளர்கள் உதயநிதியிடம் படத்தை கொடுக்க விரும்புகிறார்கள்.

இதற்குக் காரணம் உதயநிதியிடம் கணக்கு வழக்கு சரியாக இருப்பதாகவும், உடனுக்குடன் பணம் செட்டில்மெண்ட் ஆகி விடுவதாக தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. இந்நிலையில் ரெட் ஜெயண்ட்க்கு பிள்ளையார் சுழி யார் போட்டது என்ற பெரிய குழப்பத்தை பிரபலம் ஒருவர் ஏற்படுத்தி உள்ளார்.

Also Read : அள்ள அள்ள குறையாத கஜானா, தொட்டதெல்லாம் பொன்னாகுது.. பல்லாயிரம் கோடி முதலீட்டில் உதயநிதி

அதாவது ரெட் ஜெயண்ட் நிறுவனம் தொடங்கும் போது உதயநிதிக்கு கிட்டத்தட்ட 32 வயது தான் இருக்கும். முதலாவதாக 2008 இல் விஜய்யின் குருவி படத்தை உதயநிதி தயாரித்திருந்தார். குருவி படத்தை தயாரிக்க குறைஞ்சபட்சம் கிட்டத்தட்ட 25 கோடியாவது செலவாகி இருக்கும்.

அந்த வயதில் உதயநிதிக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது. அதாவது முதலமைச்சர் ஸ்டாலின் தான் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு பினாமி என்று சமீபத்திய ஊடக ஒன்றில் சவுக்கு சங்கர் கூறியுள்ளார். சமீபகாலமாக அரசியலைப் பற்றி தன்னுடைய கருத்துக்களை வெட்ட வெளிச்சமாக சொல்லி வருகிறார் சவுக்கு சங்கர்.

Also Read : மொத்தமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உதயநிதி.. அமைச்சர் ஆனாலும் விட்டுக் கொடுக்க முடியாது

அந்த வகையில் சசிகலாவின் சொத்துக்களுக்கு பினாமி ஜெயலலிதா என்று சொல்வது போல உதயநிதியின் ரெட் ஜெயண்ட்க்கு பினாமி அவருடைய தந்தை முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்ற சொல்ல ஏன் தயங்குகிறார்கள். ஸ்டாலினின் சொத்தால் ரெட் ஜெயண்ட் நிறுவனம் உருவாகியுள்ளது.

இப்போது அவரின் மகன் உதயநிதி மற்றும் மருமகள் கிருத்திகா உதயநிதி படங்களை விநியோகம் செய்து நல்ல லாபத்தை பார்த்து வருகிறார்கள். மேலும் கே எஸ் ரவிக்குமார் கூட ஒரு பேட்டியில் இது குறித்து பேசி இருந்தார் என சவுக்கு சங்கர் கூறியுள்ளார். அதாவது ஸ்டாலினிடம் கே எஸ் ரவிக்குமார் பேசும் போது உதயநிதிக்கு பிசினஸ் வைத்து கொடுக்கலாம் என்று நினைத்தேன்.

தமிழ் சினிமாவில் படம் எடுக்க வேண்டும் என்ற தான் உதயநிதி ஆசைப்பட்டார். அதனால் தான் தயாரிப்பு நிறுவனம் வைத்துக் கொடுத்தேன் என்று ஸ்டாலினே சொன்னதாக கேஸ் ரவிக்குமார் ஊடகங்களில் சொல்லி உள்ளார். ஆகையால் ரெட் ஜெயண்ட் என்ற மிகப்பெரிய நிறுவனத்திற்கு பின்னால் இருக்கும் தூண் ஸ்டாலின் தான் என சவுக்கு சங்கர் விளாசி உள்ளார்.

Also Read : விஜய்யின் பிசினஸையே நொறுக்கிய உதயநிதி.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய முரட்டு பிரபலம்

Trending News