சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

விசித்ராவை சினிமாவை விட்டு ஓட வைத்த டாப் ஹீரோ இவர் தான்.. நைட்டு ரூமுக்கு வரமாட்டியா? கொடூர முகத்தை காட்டியவர்

20 years Gap For Vichitra in cinema Industry, Hero Reason Behind the Incident: இப்போது சோசியல் மீடியாவில் விசித்ரா பற்றிய விவகாரம் தான் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அவர் தனக்கு நடந்த ஒரு விஷயம் பற்றி வெளிப்படையாக பேசியிருந்தார். அதாவது அவர் ஒரு படத்தில் நடித்த போது பெரிய ஹீரோ கொடுத்த பிரச்சனையைப் பற்றி கூறியிருந்தார்.

அவர் ரூமுக்கு வர சொன்ன போது விசித்ரா அதை கண்டுக்காமல் இருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நடிகர் தன்னுடைய பவரை வைத்து பல மோசமான வேலைகளை செய்ததாக கூறியிருந்தார். மேலும் அந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் தனக்கு நடந்த சம்பவத்தை விசித்ரா விளக்கியிருந்தார்.

உடனே பிக்பாஸ் ஆடியன்ஸ் என்னது விச்சும்மாவுக்கு இப்படி ஒரு கொடூரம் நடந்ததா என கொந்தளித்து வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட அந்த காட்சி என்ன, படம் என்ன எனவும் ஆராய தொடங்கி தற்போது கண்டுபிடித்தும் விட்டார்கள். இவ்வளவு ரணகளத்திற்கும் காரணமான அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது பிரபல தெலுங்கு நடிகர் பாலைய்யா தான்.

Also Read: விசித்ராவுக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த ஹீரோ.. அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு மறுத்ததால் விழுந்த அடி

ஏற்கனவே இவரைப் பற்றி மறைமுகமாக பல செய்திகள் வந்ததுண்டு. அதில் விசித்ராவுக்கு நடந்திருக்கும் கொடூரம் நிச்சயம் எதிர்பார்க்காதது தான். அந்த அளவுக்கு தன் ஆசைக்கு இணங்க மறுத்த நடிகையை அவர் கொடுமைப்படுத்தி இருக்கிறார். இந்த வேதனையை தாங்க முடியாமல் தான் விசித்ரா சினிமாவை விட்டு ஓடி இருக்கிறார்.

அதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படையாக அவர் கூறியிருந்தாலும் ஹீரோ பெயரை மட்டும் தெரிவிக்கவில்லை. ஆனால் இது பத்திரிகைகளில் வந்தது என்ற ஒரு குறிப்பை அவர் கொடுத்திருந்தார். உடனே ஆடியன்ஸ் அதையும் தேடி கண்டுபிடித்து இருக்கின்றனர்.

vichitra-bb7-balayya
vichitra-bb7-balayya

மேலும் இப்படி ஒரு கொடூர முகத்தை காட்டிய பாலையாவுக்கு எதிராக இப்போது ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஆக மொத்தம் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற கதையாக அவர் சிக்கி இருக்கிறார். எப்போதோ செய்த தவறு இப்போது அம்பலமாகி அவருக்கு எதிராக திரும்பி உள்ளது.

Also Read: தலைகனத்துடன் இருக்கும் 2 காமெடி ஹீரோக்கள்.. வெட்ட வெளிச்சம் ஆக்கிய பிக்பாஸ் விசித்ரா

Trending News