குத்துச்சண்டை உலகில் மிக பிரபலமானவர் மைக் டைசன். அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட இவர் 1985 முதல் 2005ஆம் ஆண்டு வரை குத்துச்சண்டை உலகின் ஜாம்பவானாக திகழ்ந்தார். யாராலும் அசைக்கமுடியாத அளவிற்கு குத்துச்சண்டை என்றால் மைக் டைசன் தான் என கூறும் அளவிற்கு தன்னுடன் போட்டி போட வந்த அனைவரையும் நாக் அவுட் பஞ்ச் மூலம் வென்று வந்தார்.
இவ்வாறாக, இவர் வெற்றிகரமாக இருந்த காலக்கட்டத்தில், அவர் எப்பொழுதும் நியூ நகரிலுள்ள வனவிலங்கு பூங்காவிற்கு அடிக்கடி செல்வதுண்டு. ஆனால் எப்போதும் ரசிகர் பட்டாளம் இவரை சூழ்ந்துக்கொள்வதால் ஒரு முறை மொத்த பூங்காவையும் ஒரு நாள் வாடகை எடுத்து தனியே அவருடைய மேனேஜர் ராபின் மற்றும் காதலியுடன் சென்று சுற்றிப் பார்த்து வந்துள்ளார்.
அப்போது ஒரு கொரில்லா வகை குரங்கு ஒன்று மற்ற கொரில்லக்கலை சீண்டி வந்ததை பார்த்து அதனுடன் சண்டையிட முடிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு பூங்காவின் மேலாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. எவ்வளவோ டைசன் முயற்சித்தும் மேலாளர்கள் விடாப்பிடியாக அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த சம்பவத்தை குறித்து பின்வரும் நாட்களில் அவர் கூறுகையில், ” நான் அங்கே சென்றபோது அந்த கொரில்லா குரங்கு தான் மட்டுமே மிகப்பெரிய பலசாலி என்னும் அகந்தையில் மற்ற குரங்குகளை சீண்டிக்கொண்டு இருந்தது. அந்த செயல் எனக்கு கோபம் வர காரணமாக இருக்க, அங்கு மேலாளராக பணியாற்றி வந்தவரிடம் 10000 டாலர் கொடுத்து நான் அந்த கொரில்லாவிடம் சண்டையிட வேண்டும்.
கூண்டின் கதவுகளை திறக்க கோரினேன். ஆனால் அந்த மேலாளர் கண்டிப்பாக இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்” என கூறினார். தன்னுடைய பலத்தின் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டு கொரில்லாவிடம் சண்டைக்கு செல்ல முற்பட்ட மைக் டைசனின் செயல், அந்நாளில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது.
விலங்குகள் மேல் எப்போதும் பிரியம் கொண்டிருந்த டைசன் தன்னுடைய வீட்டில் 3 புலிக்குட்டிகளை வளர்ந்து வந்தார். 10 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ள இவர் 2005ஆம் ஆண்டின் ஓய்விற்கு பிறகு அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இந்திய திரைப்படமான லைகர் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.