சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இர்ஃபான்க்கு பறந்த நோட்டீஸ்.. ஆர்வக்கோளாறால் செய்த வேலை

YouTuber Irfan: யூடியூப்பர் இர்ஃபான் பல்வேறு நாடுகளுக்கு சென்று பிரபல ஹோட்டல்களில் உள்ள உணவுகளை ருசித்து வீடியோக்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவருக்கு எக்கசக்க சப்ஸ்கிரைப்பர்ஸ் இருக்கின்றனர்.

இந்த சூழலில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக இர்ஃபான் பங்கு பெற்றிருக்கிறார். ஒருவர் பிரபலமானாலே அவரைப் பற்றி விமர்சனம் மற்றும் சர்ச்சைகள் உண்டாகுவது வழக்கம் தான்.

அவ்வாறு பல பிரச்சனைகளில் சிக்கி வந்த இர்ஃபான் இப்போது புதிதாக ஒரு பிரச்சனையில் மாட்டி இருக்கிறார். அவருக்கு சுகாதாரத் துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு இர்ஃபான் தனது யூடியூப்பில் ஒரு வீடியோ போட்டிருந்தார்.

யூடியூப்பர் இர்பானுக்கு சுகாதார துறை அனுப்பிய நோட்டீஸ்

அதாவது தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர்கள் கடந்த கரடு முரடான விஷயங்களை பகிர்ந்து ரசிகர்களையும் அழ வைத்துவிட்டனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தையின் பாலினம் தெரிந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்தனர்.

ஏனென்றால் தமிழ்நாட்டில் குழந்தையின் பாலினம் தெரிந்து கொள்வது சட்டப்படி தவறானது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் பல பிரபலங்களை அழைத்து குழந்தையின் பாலினம் என்ன என்பதை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வீடியோவில் என்ன குழந்தை என்று வெளியிட்டு மிகவும் எமோஷனல் ஆகி இருந்தார் இர்பான்.

இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டான நிலையில் சுகாதாரத்துறையினர் இர்பானுக்கு நோட்டீஸ் விட்டிருக்கின்றனர். அதாவது வெளிநாட்டில் குழந்தையின் பாலினம் தெரிந்து கொண்டாலும், தமிழ்நாட்டில் வந்து யூடியூப்பில் வெளியிட்டது தவறு என இர்பான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

என்ன தான் ஆர்வத்தில் இர்பான் இந்த வீடியோ வெளியிட்டு இருந்தாலும் இது மிகப்பெரிய குற்றம் என்ற சொல்ல முடியாது என பலரும் கருத்து சொல்லி வருகிறார்கள். ஏனென்றால் வெளிநாட்டுக்கு சென்று தான் தன்னுடைய குழந்தையின் பாலினத்தை கண்டறிந்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியை தனது சப்ஸ்கிரைபர்ஸ் இடம் பகிர்ந்து கொள்ள நினைத்தது மிகப்பெரிய தவறு எதுவும் இல்லை. பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இது போன்ற தேவையில்லாத சின்ன விஷயங்களை ஆராய்வது தேவையான ஒன்று என்று கருத்து கூறியுள்ளனர்.

இதுக்கு முன்னாடி இர்ஃபான்க்கு வந்த சோதனை

இந்த மூணும் அவருக்கு ரொம்ப பிரச்சனையா போச்சி. இப்ப அடுத்தது இந்த நோட்டீஸ் மேட்டர் வேற! விஜய் டிவியில் சேர்ந்த நேரமோ என்னவோ சுத்தி அடிக்கும் கர்மா.

இர்ஃபானால் பயத்தில் CWC-5 டீம்

இவரால் நமக்கு பிரச்சனை வருமோ என CWC-5 டீம் பயபடுறாங்க. இவரை வச்சி நாம சம்பாதிக்கலாம்னு நினைச்சா இவர் நம்மள வச்சி சம்பாதிக்கிறான் போலன்னு யோசிக்கிறாங்க. இதுக்கு நடுவுல CWC வந்த பிரச்சனை லிஸ்ட் பெருசாயிட்டே போகுது இதோ லிஸ்ட்.

எது எப்படியோ நம்மள வச்சி சம்பாதிக்கறாங்கனு மட்டும் நல்லா தெரியுது. நல்லா இருங்க.

Trending News