Iraivan Twitter Review: அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் இறைவன். இன்று சந்திரமுகி 2 படத்திற்கு போட்டியாக இந்த படம் வெளியான நிலையில் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை ட்விட்டர் வாயிலாக பதிவிட்டிருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களது கருத்தை இப்போது பார்க்கலாம்.
ஜெயம் ரவி இறைவன் படத்தின் மூலம் புது அவதாரம் எடுத்துள்ளார். இந்த படம் மிகவும் டார்க் திரில்லராக ஒவ்வொரு கணமும் ஈர்க்கக்கூடியது. பரபரப்பான முதல் பாதி மற்றும் த்ரில்லான இரண்டாம் பாதி. அதுவும் விஸ்வரூபம் படத்திற்கு பிறகு தனது சிறந்த நடிப்பை ராகுல் போஸ் கொடுத்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா தன்னால் டார்க் த்ரில்லர் செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
இறைவன் முதல் பாதி மெதுவாக கதை நகர்கிறது, அது இடைவேளையின் போது சூடு பிடிக்கும். ஜெயம் ரவியின் உணர்ச்சிகரமான நடிப்பும், ராகுல் போஸின் நடிப்பும் பாராட்டப்பட வேண்டியது. மேலும் இறைவன் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் மிகவும் குறைவாக உள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி ஸ்கோர் அனுபவத்தை மேம்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக, இப்படம் சராசரிக்கும் மேலான சைக்கோ த்ரில்லர் என்பதால், குறைந்த எதிர்பார்ப்புகளுடன் பார்க்கலாம்.
இறைவன் படத்தில் ஆரம்பம் முதலே கதைக்குள் அழைத்து செல்லும்போது நொடிக்கு நொடி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் பாதையில் சைக்கோ வில்லன் என்ற ஒருவரை காட்டும் போது அவர் இல்லை என்று தெரிந்த பின் யார் அந்த உண்மையான சைக்கோ வில்லன் என்ற ட்விஸ்ட் இரண்டாம் பாதியை எதிர்பார்க்க வைப்பதாக ரசிகர் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.
ஒரு நல்ல சைக்கோ தொடர் கொலையாளி புலனாய்வு திரில்லர். ஒரு கணிக்க முடியாத திருப்பம். இன்டர்வெல் பிளாக் அபாரம். நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பு அருமையாக உள்ளது. ராகுல் போஸ் தனது சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். சைக்கோ திரில்லர் கதைக்கு தேவையானதை அற்புதமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் அகமத்.
இறைவன் படத்தில் ஜெயம் ரவி மற்றும் கொலையாளியின் நடிப்பு பற்றிய விமர்சனங்கள் மிகவும் கவர்ந்துள்ளது. தான் நடித்த முந்தைய கதாபாத்திரங்கத்தில் இருந்து விலகி தைரியமான மற்றும் ஒரு அற்புதமான முயற்சியை ஜெயம் ரவி மேற்கொண்டு இருக்கிறார். கண்டிப்பாக இந்த வார விடுமுறையில் இறைவனை காண தவறாதீர்கள் என ரசிகர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.