Heavy Rain Orange Alert: கடந்த ஒன்பதாம் தேதி அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அதாவது ஒவ்வொரு வருஷமும் சென்னையே புரட்டி போடும் அளவிற்கு கனமழை வந்து கொண்டிருக்கிறது. அதுவும் டிசம்பர் மாதத்தில் சொல்லவே தேவையில்லை கனமழை காரணமாக மக்கள் ஏதாவது ஒரு விதத்தில் அவஸ்தப்படும் அளவிற்கு சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆனால் இந்த முறை எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்பதற்காக மழை நீர் வடிகால் முறை ஆங்காங்கே கட்டப்பட்டு வந்திருக்கிறது.
இருந்தாலும் டிசம்பர் மாதத்துக்கு முன்னாடியே தற்போது ஒரு ட்ரையல் கனமழையாக வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் அக்டோபர் 15ஆம் தேதி சென்னைக்கு கனமழை வரப்போகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் சென்னையில் அக்டோபர் 15 ஆம் தேதி 12 முதல் 20 சென்டிமீட்டர் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.
இது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் அக்டோபர் 11, 14, 15 ஆகிய மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் அக்டோபர் 12, 13, 16 ஆகிய நாட்களிலும் கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டு வருகிறது. அதனால் இந்த ஒரு வாரம் ரொம்பவும் எச்சரிக்கையாகவும் மக்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு முடிந்தவரை பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.