வியாழக்கிழமை, ஜனவரி 30, 2025

பொண்டாட்டிக்காக பாண்டியனை மதிக்காமல் எதிர்த்து பேசும் வாரிசு.. பாவமாக நிற்கும் கோமதி, அவஸ்தையில் ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் சொன்னபடி நம்முடைய இலட்சியத்தை நோக்கி பயணம் செய்யலாமா?. இல்லையென்றால் மாமா சொன்னபடி படித்து முடித்துவிட்டு வேறு வேலைக்கு போகலாமா என்ற யோசனையில் ராஜி இருக்கிறார். அப்பொழுது அங்கே வந்த கதிர் என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்று கேட்கிறார். அதற்கு ராஜி நான் ஆசைப்பட்டபடி போலீஸ் ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆனால் அதே நேரத்தில் இந்த வீட்டில் என்னால் பிரச்சனை வந்து விடுமோ என்ற பயமும் இருக்கிறது என்று கதிரிடம் சொல்கிறார். பிரச்சனை வரும் உன்னைப் பற்றி யார் என்ன வேண்டுமானாலும் யோசிக்கட்டும். ஆனால் அதை பற்றி நீ யோசித்தால் உன்னுடைய ஆசை நிராசையாக போய்விடும். பிறகு பத்து வருஷம் கழிச்சு போலீஸ் ஆக முடியாமல் போயிட்ட என்று வருத்தப்படும் பொழுது இப்போ இருக்கிறவங்க யாரும் உனக்கு சப்போர்ட்டாக இருக்க மாட்டாங்க.

அதனால் உனக்கு எந்த விஷயம் பிடிக்கிறதோ அதை நீ வேண்டாம் என்று முடிவு பண்ணும் வரை மற்றவர்களுக்காக விட்டு விடாதே என்று தன்னம்பிக்கையுடன் ராஜியிடம் பேசுகிறார். உடனே ராஜியும் சரி என்று சொல்லிய நிலையில் மறுநாள் வழக்கம் போல் காலையில் மைதானத்திற்கு ஓடுவதற்கு இரண்டு பேரும் போய் விட்டார்கள். அங்கே இவர்களை பார்த்த பாண்டியன் வீட்டிற்கு கோபமாக வருகிறார்.

வீட்டிற்கு வந்ததும் பாண்டியன், ராஜி கதிர் வரும் வரை கோபத்துடனே இருக்கிறார். பிறகு இவர்கள் வந்ததும் எங்கே போயிட்டு வருகிறீர்கள் என்று பாண்டியன் கேட்கிறார். அதற்கு கதிர் மைதானத்திற்கு போயிட்டு வரும் என்று சொல்லிய நிலையில் அனைவரும் அதிர்ச்சியாகி விட்டார்கள். ஏனென்றால் பாண்டியன் இந்த மாதிரி போகக்கூடாது என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறார். அதையும் மீறி கதிர் ராஜி போனதால் கோமதி கோபத்துடன் நீ ஏன் அப்பா பேச்சையே கேட்க மாட்டியா என்று கேட்கிறார்.

உடனே பாண்டியன் அவன் தான் எப்போதும் அடங்காமல் இருப்பான் என்றால் நீயும் என் பேச்சை கேட்க கூடாதா என்று முடிவுக்கு வந்து விட்டாயா என பாண்டியன், ராஜிடம் கேட்கிறார். அதற்கு கதிர் என்ன கேள்வி கேட்பதாக இருந்தாலும் என்னிடம் கேளுங்கள் ராஜிடம் பேசத் தேவையில்லை என்று பாண்டியனிடம் குதர்க்கமாக பேசிவிட்டார்.. இதனால் பாண்டியன், அப்படி என்றால் நான் உன்னுடைய பொண்டாட்டி கிட்ட எதுவும் கேள்வி கேட்க கூடாது அப்படி தானே என்று கோபப்பட ஆரம்பித்து விட்டார்.

பின்பு பாண்டியன் நாளைக்கு நீங்க மைதானத்திற்கு போய் ஓடக்கூடாது என்று சொல்கிறார். அதற்கு கதிர் நாளைக்கு போக மாட்டோம் என்று சொல்லிவிட்டு உங்களுக்காக நாங்க ஒன்னும் போகவில்லை. சென்னையில் என்னுடைய தோழிக்கு கல்யாணம் நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக நானும் ராஜியும் சென்னைக்கு போகிறோம். அதனால் நாளைக்கு மைதானத்திற்கு போக மாட்டோம் என்று விதண்டாவிதமாக பேசி பாண்டியனை மதிக்காமல் எதிர்த்து பேசி விட்டார்.

கதிர் அவருடைய முடிவில் தெளிவாகவும் ராஜிக்காகவும் என்னதான் மெனக்கெடு எடுத்தாலும் ஒரு கூட்டு குடும்பத்தில் இருக்கும் பொழுது அப்பாவின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அப்பாவை சமாதானப்படுத்த வேண்டும் என்பதுதான் சரியாக இருக்கும். ஆனால் அதை விட்டுவிட்டு கதிர் நான் இப்படித்தான் என்னுடைய மனைவியும் அவருடைய இஷ்டப்படி தான் இருப்பாள். அதை யாரும் கேள்வி கேட்கவும் கூடாது கண்டிக்கவும் கூடாது என்று சொல்வது கூட்டு குடும்பத்திற்கு சிறந்த உதாரணமாக இருக்காது.

பாண்டியன் பக்கம் நியாயமே இல்லை என்றால் கூட இந்த குடும்பத்தை கட்டி காக்கும் பொறுப்பில் அவர் இருப்பதால் அவரிடம் பேசி சமாதானப்படுத்தி இருக்கலாம். இதற்கெல்லாம் நடுவில் ராஜி என்ன சொல்வது என்று தெரியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் கதிர், இப்பொழுதெல்லாம் அப்பாவை எதிர்த்து பேசி மதிக்காமல் இருக்கான் என்ற பரிதாபத்தில் பாவமாக கோமதியும் நிற்கிறார். ஆனால் எப்படியும் கதிர் இருக்கும் பிடிவாதத்தினால் ராஜியை போலீஸ் அதிகாரியாக ஆக்கிவிடுவார்.

Trending News