செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

டாப் நடிகர்கள் இன்றுவரை செய்யாத உதவி.. துணிச்சலாக செஞ்சு காட்டிய லாரன்ஸ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி ஆக்சன் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படம் “ஜிகர்தண்டா”. இப்பொழுது இதன் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்கள். தற்பொழுது ஜிகர்தண்டா 2 படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். முதல் படத்தை விட இரண்டு மடங்கு இதில் அதிக ஆக்சன் காட்சிகளை வழங்க இருப்பதால் இதற்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். மேலும் இதில் நடித்துவரும் லாரன்ஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஒரு புதிய பாட்டிக்கு கண் பிரச்சனை இருப்பதாக தெரிந்து கொண்டு அவரிடம் கேட்காமலே அவருக்கு அதிகமான உதவியை செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கொடைக்கானலில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் வாழும் மக்கள் மழைக்காலத்தில் நாங்கள் யாரும் வீட்டில் தங்க முடியவில்லை கஷ்டமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.

Also read: ஜிகிர்தண்டா 2 அசால்ட் சேதுவாக நடிக்கப் போகும் மாஸ் ஹீரோ.. மரண அப்டேட் வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

இதனைக் கேட்ட லாரன்ஸ் அதற்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் நான் உங்களுக்கு செய்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அங்கிருந்த மக்கள் எங்களுக்கு மிகப்பெரிய சமுதாயக்கூடம் வேண்டுமென கேட்டுள்ளனர். இதற்கு சற்றும் யோசிக்காமல் அதை நான் உடனே நிறைவேற்றித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

எந்த முன்னணி நடிகரும் இதுவரை இப்படி செய்ததும் இல்லை, அரசியலில் வரவேண்டும் என்று நினைக்கும் நடிகர்கள் கூட இந்த அளவுக்கு உதவிகள் யாருக்கும் பண்ணது கூட இல்லை. ஆனால் இவர் அரசியலுக்காகவே இதெல்லாம் செய்கிறார் என்றால் கூட இதுவரை எந்த நடிகரும் இப்படி நேரடியாக படபிடிப்பு தளத்தில் சொன்னதை செய்ததாக வரலாறு இல்லை என்பது தான் உண்மை.

Also read: லீக்கானது சந்திரமுகி 2-வின் ஒன் லைன் ஸ்டோரி.. வேட்டை மன்னாக மிரட்ட போகும் லாரன்ஸ் பராக் பராக்!

மேலும் சில நடிகர்கள் விளம்பரத்திற்காக நான் செய்து தருகிறேன் என்று சொன்னாலும் கூட உண்மையாக செய்து கொடுக்க மாட்டார்கள். இந்த மாதிரியான நடிகர்களுக்கு இடையில் இவர் இந்த உதவியை செய்து வந்தது தமிழ் சினிமாவே மிகவும் ஆச்சரியத்துடன் பார்க்க வைக்கிறது.

அதுமட்டுமில்லாமல் ஜிகர்தண்டா 2 படப்பிடிப்பின் போது அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் உடைகளை எடுத்து கொடுத்துள்ளார் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் கேட்ட உதவிகளை செய்து வரும் லாரன்ஸ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Also read: ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்திற்கு ஆப்பு.. நடிகையின் திமிர் பேச்சால் வந்த விளைவு

Trending News