சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்த நடிகர் ஒருவர் தன் வாழ்நாளின் கடைசி வரை கேரக்டர் ரோல் மட்டுமே செய்திருக்கிறார். அதன்மூலம் அவர் ஏகப்பட்ட விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம் எம்ஜிஆர், சிவாஜி படங்களில் அப்பா, தாத்தா கேரக்டர்களில் மட்டுமே நடித்து பிரபலமாகி இருக்கிறார் ஒரு நடிகர்.
அவர் வேறு யாரும் அல்ல தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து இன்டர்நேஷனல் லெவலில் புகழ்பெற்ற நடிகர் எஸ் வி ரங்கா ராவ் தான். இவரை பெரும்பாலும் கேரக்டர் ரோலில் மட்டுமே பார்க்க முடியும். அதிலும் அப்பா, தாத்தா போன்ற கேரக்டர்களில் அதிகமாக பார்க்க முடியும்.
தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இவர் பாதாள பைரவி உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சற்று புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம் என்ற ஒரு பாடல் அன்றைய கால குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாடலாக இருந்தது.
அந்தப் பாடலில் மிகப்பெரிய உருவத்துடன் ஒருவர் அங்கு இருக்கும் அத்தனை உணவுகளையும் காலி செய்வார். அந்தப் பாடலில் நடித்திருந்தவர் தான் இந்த எஸ் வி ரங்கா ராவ். இவருக்கு சினிமாவில் கடைசி வரை ஹீரோ வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அதற்கு காரணம் அவருடைய உடல் வாகு தான். ஆறடி உயரமும், அதிக எடையும் கொண்ட இவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சொல்லப்போனால் இவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால் அவர் கடைசிவரை எல்லா திரைப்படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருக்கிறார்.
அப்படி நடித்தே அவர் பல்வேறு தேசிய விருதுகள், சர்வதேச விருதுகள், பிலிம்பேர் மற்றும் நந்தி விருது போன்ற பல விருதுகளை வாங்கி குவித்து இருக்கிறார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இவர் இருந்திருக்கிறார். இப்படி பல்வேறு புகழுடன் வாழ்ந்த இவர் மாரடைப்பின் காரணமாக 1974 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.