வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரஜினி, விஜய்யை ஓரம்கட்ட வரும் ஹீரோ.. தந்திரமாக செய்து வரும் வேலை

Rajini-Vijay: தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இப்போது இரண்டு நடிகர்களுக்குள் போட்டியாக பார்க்கப்படுவது ரஜினி மற்றும் விஜய் தான். ஒரு காலத்தில் அஜித், விஜய் என்று போட்டி போய்க் கொண்டிருந்த நிலையில் அதிலிருந்து பின்வாங்கி விட்டார். ஏனென்றால் அவருடைய விடாமுயற்சி படம் தற்போது வரை இழுபறியில் இருந்து கொண்டிருக்கிறது.

இதனால் இப்போது சமூக வலைத்தளங்களில் ரஜினி, விஜய் ரசிகர்கள் இடையே தான் கடுமையான வாக்குவாதங்கள் நடந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்ட போது விஜய் தனது ரசிகர்களிடம் சமூக வலைத்தளங்களில் மோசமாக நடந்து கொள்ள வேண்டாம் என எச்சரித்தார்.

நம்பர் ஒன் இடத்திற்கு ரஜினி, விஜய் இடையே போட்டி நடந்து வரும் நிலையில் அவர்களை ஓரம்கட்டி சைலன்டாக கமல் வேலை பார்த்து வருகிறார். அதாவது சமீபத்தில் தான் இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டிருந்தது.

Also Read : ரஜினியை இயக்கியதால் நெல்சனுக்கு குத்தப்பட்ட முத்திரை.. கை கொடுக்க ஆள் இல்லாமல் திண்டாடும் பரிதாபம்

இப்போது அதையே மறக்கடிக்கும் அளவுக்கு மணிரத்தினம் மற்றும் கமல் கூட்டணியில் உருவாக இருக்கும் Thug Life வீடியோ வெளியாகி இருந்தது. அதுவும் மருதநாயகம் ஸ்டைலில் கமல் சம்பவம் செய்திருக்கிறார். விக்ரம் படத்திற்கு பிறகு கமல் இப்போது தான் ஃபார்முக்கு வந்திருக்கிறார்.

மேலும் ஜெயிலர் மற்றும் லியோ படங்கள் ஒரே மாதிரி ஜானரில் இருந்ததால் வசூல் நன்றாக இருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி என்ற சொல்லிவிட முடியாது. ஆனால் கமலின் இந்தியன் 2 படம் உலக தரத்தில் உருவாகி வருகிறது. ஆகையால் அவரது படங்கள் இனி சர்வதேச தரத்தில் பேசப்படும்.

இது தவிர ரஜினி, விஜய் போன்ற ஹீரோக்கள் இப்போது சமூக அக்கறை கொண்ட படங்களில் நடிக்க தயக்கம் காட்டி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தை மையமாக வைத்து வினோத் எடுக்க உள்ள படத்திலும் கமல் நடிக்க இருக்கிறார். ஆகையால் இனி ஆண்டவரின் கொடி தான் பறக்க இருக்கிறது.

Also Read : சிம்பு இடத்தை அசால்டாக தட்டி தூக்கிய வாரிசு நடிகர்.. மணிரத்தினம்-கமல் கூட்டணியில் என்ன ரோல் தெரியுமா?

Trending News