சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பிக்பாஸ் விசித்ராவுக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த ஹீரோ.. அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு மறுத்ததால் விழுந்த அடி

Bigboss Vishitra slapped heavy for refusing adjustment: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் நடந்த ஒரு முக்கிய விஷயம் இப்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களுக்கு பூகம்ப டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதன்படி விசித்ரா தான் ஏன் நடிப்பை விட்டு விலகினேன் என்பதற்கான காரணத்தை கூறியிருந்தார். அதில் அவர் சொன்ன விஷயம் தான் இப்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அதாவது முன்னணி ஹீரோ ஒருவரின் படத்தில் நடிப்பதற்காக அவர் கேரளாவுக்கு சூட்டிங் சென்று இருக்கிறார்.

அப்போது ஒரு நாள் அந்த படத்தின் ஹீரோ விசித்ராவை தன் ரூமுக்கு வரும்படி சொல்லி இருக்கிறார். ஆனால் விச்சு அதை கண்டு கொள்ளாமல் தன் வேலையை பார்த்து இருக்கிறார். அதை தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட தொந்தரவுகள் நடந்திருக்கிறது. அதாவது இரவு நேரத்தில் ரூம் கதவை நான்கு பேர் கொண்ட கும்பல் தட்டி பயமுறுத்தி இருக்கின்றனர்.

Also read: என்ன தரையில பேசினதெல்லாம் திரையில வருது.. பிக்பாஸ் மைண்ட் வாய்ஸை கேட்ச் செய்த விஷ்ணு

இருந்தாலும் அவர் அதை எப்படியோ சமாளித்திருக்கிறார். இதையெல்லாம் தாண்டி ஒரு முக்கிய காட்சியை படமாக்கப்படும் போது அவரை சிலர் தகாத இடங்களில் தொட்டு தடவி இருக்கின்றனர். இதை விசித்ரா இயக்குனரிடம் புகாரளித்த நிலையில் அவர் சம்பந்தப்பட்டவரை கேட்காமல் விச்சுவை அனைவர் முன்னிலையிலும் அறைந்திருக்கிறார்.

இதனால் செய்வதறியாது திகைத்துப் போன அவர் நடிகர் சங்க யூனியனில் இது குறித்து புகார் அளித்திருக்கிறார். உடனே அவர்களும் அந்த படத்தில் நடிக்க வேண்டாம் வந்துவிடுங்கள் என்று கூறி இருக்கின்றனர். மேலும் இது குறித்து கைப்பட புகார் கடிதமும் அவர் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அவருக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லையாம்.

யூனியனில் இருந்த அப்போதைய தலைவர் கூட இதை மறந்துட்டு வேலையை பாரும்மா என்று சொல்லி இருக்கிறார். இப்படி தனக்கு ஆதரவு கொடுக்காத இந்த துறை வேண்டாம் என்று தான் அவர் ஒதுங்கி இருக்கிறார். 20 வருடங்களுக்கு மேல் கஷ்டப்பட்டு நடித்தும் கூட ஒரு நடிகை இந்த அளவுக்கு அவமானப்படுத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read: ஒன்னு கூடி ஒப்பாரி வைக்கும் ஹவுஸ் மேட்ஸ்.. TRP-க்காக இதெல்லாம் ஒரு டாஸ்க்கா பிக்பாஸ்

Trending News