வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மாஸ் ஹீரோவால் கோட்டையை பிடித்த ஹீரோ.. புலம்பித் தவிக்கும் நம்பர் நடிகை

இப்போது இரண்டு நம்பர் நடிகைகளுக்குள் போட்ட போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அதாவது ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை ஒருவர் தனது கெட்ட நேரத்தால் பட வாய்ப்பு இழந்து மற்ற மொழி படங்களில் நடிக்க சென்று விட்டார்.

இதுதான் சாக்கு என்று உள்ளே நுழைந்த நடிகை பல வருடங்களாக நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து வந்தார். ஆனால் அவரும் குடும்பம், குட்டி என செட்டிலாக பட வாய்ப்பு குறை ஆரம்பித்தது. நடிகை நடித்து வெளியான படங்களும் பெரிய அளவில் போகவில்லை.

இந்நிலையில் அக்கடதேசம் சென்ற நடிகை பிரம்மாண்ட படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த சூழலில் பழைய உறவை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு மாஸ் நடிகரை தனது கட்டுப்பாட்டில் நடிகை கொண்டு வந்து விட்டார். இதன் மூலம் அடுத்த அடுத்த படம் வாய்ப்புகளையும் பெற்றுவிட்டார்.

இதனால் நம்பர் நடிகையை ஓரம் கட்டி விட்டு முன்னணி இடத்திற்கு வந்து விட்டார். அதோடு நடிகையின் சம்பளம் இப்போது ஜெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. மேலும் தான் நினைத்ததை எல்லாவற்றையும் ஹீரோவை வைத்து நடிகை சாதித்தார்.

இப்போதே கைவசம் 10க்கும் மேற்பட்ட படங்களை வைத்துள்ளாராம். இன்னும் இரண்டு, மூன்று வருடத்திற்கு யார் நினைத்தாலும் அசைத்துப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு கோலிவுட்டின் கோட்டையை பிடித்து வைத்திருக்கிறார்.

Trending News