செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

சாவதற்கென்றே அதிக முறை நடித்த ஹீரோ.. முதன்முதலாக ஜீவா படத்தில் வாங்கி வந்த வரம்

நல்ல திறமைகள் இருந்தும் இன்று வரை வளர முடியாமல் பல ஹீரோக்கள் திணறி வருகின்றனர். அப்படி அதிக முறை படத்தில் இறக்கும் கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார் ஹீரோ ஒருவர். இவர் இதுவரை 38 படங்களில் நடித்துள்ளார் அதில் 20 படங்களுக்கு மேல் படம் முடிவதற்குள் இவரது கதாபாத்திரம் இறந்துவிடும்.

ஆரம்பத்தில் இருந்தே இவர் சப்போர்ட் நடிகராகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அப்படி ஹீரோவின் நண்பன் கதாபாத்திரங்கள் தான் பெரும்பாலும் இவர் ஏற்று நடித்தது . அப்படி நடித்த படத்தில் கூட இவர் இறந்து விடுவார். இவருக்காக அந்த கதை எழுதப்பட்டதா இல்லை அந்த மாதிரி கதைகளையே இவர் தேர்ந்தெடுத்து நடிக்கிறாரா என்று தெரியவில்லை.

2010 இல் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். தமது பதினைந்து வருட சினிமா பயணத்தில் பாதி படங்களுக்கு மேல் இறக்கும் கதாபாத்திரம்தான் இவருக்கு கிடைத்தது. இன்று வரை தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடி வருகிறார். நல்ல திறமைகள் இருந்தும் இவருக்கு இந்த கதாபாத்திரம்தான் செட் ஆகும் என முத்திரை குத்தப்பட்டுள்ளார்.

முதன்முதலாக ஜீவா படத்தில் வாங்கி வந்த வரம்

சர்ச்சை இயக்குனர் மிஷ்கின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார். நந்தலாலா படத்தில் மூலம் அறிமுகமானவர் நடிகர் கலையரசன். அதன்பின் முகமூடி, மெட்ராஸ், தானா சேர்ந்த கூட்டம், மதயானை கூட்டம், பத்து தலை என இவர் நடித்த படத்தில் பெரும்பாலும் இறந்து விடுவார்.

மெட்ராஸ் மற்றும் முகமூடி படம் இவரது சினிமா கேரியருக்கு நல்ல ஒரு டர்னிங் பாயிண்ட்டைகொடுத்தது. இந்த இரண்டு படங்களிலும் ஹீரோவின் நண்பராக வரும் கலையரசன் இறந்து விடுவார். மெட்ராஸ் படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த அன்பு கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. கார்த்தியை காப்பாற்றி விட்டு இவர் இறந்து விடுவார்.

- Advertisement -spot_img

Trending News