திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இவர் கூட ஜோடி போட்டு நடிச்சா , ஸ்ட்ரெயிட்டா கல்யாணம்தான்.. சமந்தா வரிசையில் சிக்கிய 2 அழகிகள்

இந்திய சினிமாவை பொறுத்த வரைக்கும் முன்னணி ஹீரோயின்களாக இருக்கும் நடிகைகள் தங்களது மார்க்கெட் குறையும் வரை திருமணத்தைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள். இது சினிமா நடிகைகளின் எழுதப்படாத சட்டம் என்று கூட சொல்லலாம். ஆனால் சமீப காலமாக முன்னணி நடிகைகள் நல்ல பட வாய்ப்புகள் இருக்கும்பொழுது திருமண வாழ்க்கையை தொடங்கி விடுகிறார்கள்.

அப்படி சமீபத்தில் நல்ல மார்க்கெட் இருக்கும்போது திருமணம் செய்த முன்னணி ஹீரோயின்கள் தான் ஆலியா பட் மற்றும் கியாரா அத்வானி. இந்த நடிகைகள் வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே தங்களுடைய திருமண வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்கள். இவர்கள் திருமணம் குறித்து தற்போது எதேர்ச்சையாக நெட்டிசன்களிடம் ஒரு விஷயம் சிக்கி இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இது வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

Also Read: பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்த சமந்தா.. வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம்

தெலுங்கு சினிமா உலகின் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் தான் ராம்சரண் தேஜா. இவர் தன்னுடைய சிறந்த நடிப்பினால் ஒரு ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் வைத்திருக்கிறார். தற்போது இந்த நடிகைகளின் திருமணத்திற்கான காரணமாக சொல்லப்படுபவர் தான் ராம்சரண். அதாவது இவருடன் ஒரு படம் நடித்து விட்டாலே அடுத்து அந்த நடிகைகளுக்கு திருமணம் ஆகி விடும் என்று இந்த நடிகைகளை எடுத்துக்காட்டாக வைத்து நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகின்றனர். இதில் நடிகை சமந்தாவும் உண்டு.

சமந்தா: நடிகை சமந்தா, ராம்சரண் தேஜா உடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் ரங்கஸ்தலம். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. சமந்தாவும், நாக சைதன்யாவும் பல வருடங்கள் காதலித்து வந்தனர். ரங்கஸ்தலம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு அக்டோபர் 2017 ஆம் ஆண்டு சமந்தாவும். நாக சைதன்யாவும் தங்களுடைய திருமண உறவில் இணைந்தனர்.

Also Read: மீண்டும் சமந்தா நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா? அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பதிலடி

ஆலியா பட்: ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரது காதலும், திருமணமும் பாலிவுட் உலகில் விமர்சையாக பேசப்பட்ட ஒன்று. ஆலியா பட் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் இன்று உலக அரங்கில் இந்திய சினிமாவை பெருமையாக பேச வைத்திருக்கிறது. இந்த படம் ஆலியா பட் ராம்சரணுடன் இணைந்து நடித்த திரைப்படம். இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் ஆலியா பட்டுக்கும், ரன்பீர் கபூருக்கும் திருமணம் முடிந்தது. இவர்கள் இருவருக்கும் தற்போது அழகான பெண் குழந்தையும் உள்ளது.

கியாரா அத்வானி: தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் கியாரா அத்வானி. சில தினங்களுக்கு முன்பு சித்தார்த் மல்கோத்ராவிற்கும், கியாரா அத்வானிக்கும் விமர்சையாக திருமணம் நடைபெற்றது. கியாரா அத்வானி நடிகர் ராம்சரணுடன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஆர் சி 15 என்னும் பெயரிடாத திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அழகை இழந்துவிட்ட சமந்தா.. ரசிகரின் கேலி, கிண்டலுக்கு சரியான பதிலடி

Trending News