வெள்ளிக்கிழமை, மார்ச் 14, 2025

விஜய், சுந்தர் சி, அஜித் விட்டுக் கொடுக்காத செல்லப் பிள்ளைகள்.. ரேஸ் குதிரை ஜாக்கியாய் வலம் வரும் 5 நடிகர்கள்

பெரிய ஹீரோக்கள் அனைவரும் சில ஆஸ்தான சப்போர்ட் நடிகர்களை கூடவே வைத்துக் கொள்வார்கள் அப்படி ஐந்து ஹீரோக்கள் எப்பொழுதும் விட்டுக் கொடுக்காமல் தங்களது எல்லா படங்களிலும், வாய்ப்பு கொடுத்து கூடவே கூட்டிட்டு வரும் அந்த தனித்துவமான சப்போர்ட் நடிகர்களை பார்க்கலாம்.

சுந்தர் சி: 1994ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஒரு நடிகரை விட்டுக் கொடுக்காமல் தன்னுடைய அனைத்து படங்களிலும் வாய்ப்பு கொடுத்து வருகிறார். தாய்மாமன் படத்தில் ஆரம்பித்து இன்று அரண்மனை நான்காம் பாகம் வரை நடித்துள்ளார் விச்சு விஸ்வநாத்.

விஜய் சேதுபதி: நண்பர்கள், தெரிந்தவர், தெரியாதவர்கள், என யாராக இருந்தாலும் அவருக்கு உதவி செய்யும் நற்குணங்கள் கொண்டவர் விஜய் சேதுபதி. இவர் நடிகர் அருள் தாசை என்றும் விட்டுக்கொடுக்க மாட்டார். தன்னுடைய அனைத்து படங்களிலும் அவருக்கென ஒரு கதாபாத்திரம் வைத்திருப்பார்.

சிவகார்த்திகேயன்: காமெடி நடிகர் சதீஷ் உடன் ஒரு காலத்தில் அனைத்து படங்களிலும் நடித்து வந்த சிவகார்த்திகேயன் இன்று யோகி பாபு இல்லாமல் எந்த ஒரு படங்களையும் கமிட் செய்வதில்லை. தன்னுடைய எல்லா படங்களிலும் பாபுவை அழைத்துச் வருகிறார் சிவா.

விஜய்: காமெடிக்காக வடிவேலு, யோகி பாபு என கூட்டணி போட்டு வந்த இளைய தளபதியி இன்று வி டிவி கணேசை விட்டுக் கொடுப்பதே இல்லை. பீஸ்ட், வாரிசு என ஆரம்பித்த இந்த கூட்டணி இன்று ஜனநாயகன் வரை அனைத்து படங்களிலும் கூட்டி வருகிறார் விஜய்.

அஜித்: பொதுவாக ஒரு கூட்டணி செட் ஆகிவிட்டால் அதை மாற்ற பெரிதும் யோசிப்பார் அஜித் குமார். இப்பொழுது ஒரு வில்லன் நடிகரை எல்லா படங்களிலும் கமிட் செய்து வருகிறார் அஜித். விளம்பரம் மாடல் நடிகர் ஜான் கோக்கன் இவரின் எல்லா படங்களிலும் தலை காட்டி வருகிறார்.

Trending News