திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

6 உச்ச நட்சத்திரங்களூடன் நடித்த ஒரே நடிகை.. கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஹீரோக்கள் விட்ட ஜொள்ளு

தமிழ் சினிமா நடிகர்கள் பலபேர் வரலாற்றுச் சாதனை செய்துள்ளனர். எம்ஜிஆர், சிவாஜி அந்த காலத்தில் செய்யாத சாதனைகளே கிடையாது. எம்ஜிஆர் அதிக இரட்டை வேடங்கள் படங்களில் நடித்து அசத்தியவர். சிவாஜி கணேசன் கிட்டத்தட்ட அதிக படங்களில் முன்னணி நட்சத்திரமாக நடித்து அசத்தியவர்.

இவர்கள் காலகட்டத்திற்கு பிறகு ரஜினி, கமல் போன்ற பெரிய நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவை ஆளத்தொடங்கினர். அவர்களுக்குப் பின்னர் இப்பொழுது அஜித், விஜய் போன்றவர்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருகின்றனர்.

Also Read: மறைந்த ஸ்ரீதேவியின் 250 கோடி சொத்துக்கு நடக்கும் பனிப்போர்.. மகள்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போனி கபூர்

இந்த ஆறு உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து ஒரே ஒரு ஹீரோயின் மட்டும் இன்று வரை சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான சாதனையை வைத்துள்ளார். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிறுவயதிலிருந்தே கிட்டத்தட்ட 40 வருடங்கள் சினிமாவிற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

நடிகை ஸ்ரீதேவி இரண்டு தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர். தமிழ் சினிமா முதல் பாலிவுட் வரை தனது பெயரை நிலைநிறுத்திச் சென்றவர். திரை வாழ்க்கையில் ஹீரோக்களுக்கு நிகரான வெற்றியை பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி தான்.

Also Read: நடிகை ஷோபனாவிற்கு 50 வயதில் திருமணமா? யாருப்பா மாப்பிள்ளை நமக்கே பார்க்கணும் போல இருக்கே

நடிகை ஸ்ரீதேவி, கண்களுக்கு இன்றும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் ஹீரோக்கள் முதல் பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து ஹீரோக்களும் ஸ்ரீதேவி என்றால் ஜொள்ளு விடுவார்கள். பல சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து அதிக விருதுகளையும் வென்றவர்.

ஸ்ரீதேவி மட்டுமே எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என 6 பெரிய நட்சத்திரங்களுடன் நடித்து அசத்தியிருக்கிறார். பின்னர் பாலிவுட்டில் போனி கபூரை கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். அதன்பின் மர்மமான முறையில் தண்ணீர் தொட்டியில் ஒருநாள் இறந்தும் கிடந்தார்.

Also Read: மீள முடியாத துயரில் இருந்த சரோஜாதேவி.. கோபத்தை மறந்து எம்ஜிஆர் செய்த பேருதவி

Trending News