புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 9 படங்கள்.. இனிமேல் ரொமான்ஸ்க்கு வேலையே இல்ல

வணக்கம் சினிமாபேட்டை வாசகர்களே! தொடர்ந்து தமிழ் சினிமாவின் சிறப்புக் கட்டுரைகளை இந்த வலைத்தளத்தில் கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் காணவிருக்கும் தலைப்பு கதாநாயகன் இல்லாமல் தனித்துவம் பெற்ற தமிழ்த் திரைப்படங்கள். இந்த லிஸ்டில் இருக்கும் திரைப்படங்களில் கதாநாயகன் இல்லாமலோ அல்லது முக்கியமற்ற கதாபாத்திரமாக இருந்திருக்கக் கூடும். வாருங்கள் கட்டுரைக்குள் செல்வோம்

அவள் ஒரு தொடர்கதை: இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய இந்த திரைப்படத்தில் சுஜாதா கதாநாயகியாக நடித்திருந்தார். கவிதா என்னும் பெயரில் நடித்திருந்த சுஜாதாவின் கதாபாத்திரம் குடும்பத்திற்காக மாடாய் உழைக்கும் நாகரீக பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அவர் தன்னுடைய தங்கை தம்பிகளுக்காக வாழும் வாழ்க்கையும் தனது திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டு அவர்களுக்காக செய்யும் அர்ப்பணிப்பும் முழு படமாக இருந்தது. கமல்ஹாசன் இந்த திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனதில் உறுதி வேண்டும்: இந்தத் திரைப்படத்தையும் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களே இயக்கியிருந்தார். சுகாசினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் அவருடைய உடன்பிறந்தோர் நலனுக்காக சென்னையில் தங்கி நர்ஸ் வேலை பார்க்கும் சுகாசினியின் வாழ்க்கையை விவரிக்கிறது இந்த திரைப்படம். இந்த திரைப்படத்தில் கடிதம் போட்டு தனது குடும்பத்தை மிரட்டும் சம்பவங்கள் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருக்கும். பாடகர்கள் எஸ் பி பாலசுப்ரமணியம் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

சினேகிதியே: ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் ஜோதிகாவும் அவரது தோழியாக ஹிந்தி நடிகை ராணி முகர்ஜியின் தங்கையான சபா ரணி முகர்ஜி நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தபு இடம் பெற்றிருந்தார். பெண்கள் கல்லூரியில் நடக்கும் ஒரு கொலையின் பின்னணியை இந்த திரைப்படம் விளக்குகிறது. இறுதிவரை சஸ்பென்சாக செல்லும் இந்த திரைப்படத்தை நிச்சயம் ஒருமுறை பார்க்க வேண்டும்.

காக்கா முட்டை: ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரமாக நடித்து இருந்த இந்த திரைப்படத்தில் அவருடைய மகன்கள் ஆக இரண்டு சிறுவர்கள் நடித்திருந்தனர். பீசா விளம்பரத்தைப் பார்த்த பின்னர் பீட்சாவை சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் செய்யும் காரியங்கள் ரசிக்கும்படி திரைக்கதை அமைக்கப் பட்டிருந்தது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் மணிகண்டன் அவர்கள் இயக்கியிருந்தார். சிலம்பரசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மிகப்பெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை தமிழக மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்

குற்றம் கடிதல்: ஆசிரியை ஒருவர் தவறுதலாக மாணவனை தாக்க அவன் மயக்கம் அடைகிறான். ஆசிரியை காப்பாற்ற பள்ளி நிர்வாகம் செய்யும் நடவடிக்கைகளும் அந்த சம்பவத்துக்கு நீதி கேட்டுப் போராடும் சிறுவனின் குடும்பம் பற்றிய கதைதான் இந்த குற்றம் கடிதல். மாற்று சினிமாவுக்கான இந்த திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் திறம்பட வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஐரா, டோரா: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்த இந்த இரண்டு திரைப்படங்களிலும் கதாநாயகர்கள் என்று யாரும் இல்லை. முழுக்க முழுக்க நயன்தாராவை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்த திரைப்படங்கள் தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தன.

கோலமாவு கோகிலா: இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நடித்த திரைப்படம் கோகோ எனப்படும் கோலமாவு கோகிலா. குடும்பத்துடன் சேர்ந்து பணத்திற்காக அவர்கள் போடும் வேஷம் அதற்கு உதவப் போய் மாட்டிக் கொள்ளும் யோகி பாபு கொண்ட கதைதான் இந்த கோ கோ. நகைச்சுவைக் கதைகளை எழுதுவதில் வல்லவரான நெல்சன் இந்தப் படத்தை திறம்பட எழுதி இயக்கியிருந்தார். நயன்தாராவின் அசாதாரமான நடிப்பினாலும் தேர்ந்த திரைக்கதையாலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது

மகளிர் மட்டும்: நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகிணி ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படத்தை சிங்கீதம் சீனிவாச ராவ் அவர்கள் இயக்கியிருந்தார். திரைப்படத்தை தயாரித்ததுடன் சிறப்பு தோற்றத்திலும் கமல்ஹாசன் நடித்து இருந்தார். ஜொள்ளு பார்ட்டி யான மேனேஜரிடம் மாட்டிக்கொள்ளும் 3 பெண்களும் அவர்களுடைய நகைச்சுவையான கடத்தலும் கொண்ட சுவாரசியமான திரைப்படம் மகளிர் மட்டும். இந்த திரைப்படத்தில் பிணம் ஆகவே சிறப்பாக நடித்திருந்தார் நடிகர் நாகேஷ். கிரேசி மோகனின் வசனத்தில் இந்த திரைப்படம் நல்லதொரு நகைச்சுவை திரைப்படமாக அமைந்தது.

Trending News