புதன்கிழமை, மார்ச் 12, 2025

ஜனநாயகன் வாய்ப்பு கிடைக்கும் போது உங்க தயவு எதுக்கு.. விஜய்யை பார்க்க பறந்த புது தேன்சிட்டு

தமிழில் நடித்தது 2 படங்கள் தான் அதற்குள் பெரிய ஹீரோக்கள் உடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு, புது ஹீரோயின் ஒருவருக்கு தேடி வருகிறது. அதனால் துண்டு துக்கடா படங்கள் வேண்டாம் என எல்லாத்தையும் ஒதுக்கி விட்டு விஜய்யை நோக்கி பறக்கிறார்.

22டே வயதாகும் அந்த நடிகை தான் இப்பொழுது கோடம்பாக்கத்தில் மோஸ்ட் வான்டெட் ஹீரோயினாக வளம் வந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய 17வது வயதிலேயே நடிக்க வந்த அந்த ஹீரோயின் பார்ப்பதற்கு தேன் சிட்டு போல் இருப்பார்.

இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் கமிட் ஆனவர் பிரேமலு புகழ் ஹீரோயின் மமீதா பஜுலு. பிரேமலு படம் அடித்த சூப்பர் ஹிட்டால் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

2024ஆம் ஆண்டு தமிழில் ஜீ வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ரெபெல் படத்தில் மூலம் அறிமுகமானவர் மம்தா. பிரேமம் படத்திற்குப் பின்னர் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தாலும் சின்ன சின்ன படங்களில் கமிட்டாக யோசிக்கிறார். இப்பொழுது ஜனநாயகன் படம் என்றதுமே ஆகாஷ் பாஸ்கரை கழட்டி விட்டுவிட்டார்.

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தில் அவருக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் மம்தா பஜுலு. மலையாளத்தில் அறிமுகமான இவர் இப்பொழுது தமிழிலும் தன் கொடியை பறக்க வைக்க திட்டம் போடுகிறார். நயன்தாரா சிம்ரன் ஜோதிகா வரிசையில் சினிமாவில் இவர் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News