வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தலைகால் புரியாமல் ஆடும் விஜய் பட ஹீரோயின்.. தெனாவட்டு பேச்சால் சரியும் மார்க்கெட்

மாஸ் ஹீரோவாக வலம் வரும் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதுதான் இப்போதைய இளம் நடிகைகளின் கனவாக இருக்கிறது. இதனால் பல நடிகைகளும் போட்டி போட்டு வரும் நிலையில் ஒரு சில நடிகைகளுக்கு மட்டும்தான் அந்த வாய்ப்பு விரைவில் கிடைத்து விடுகிறது. அப்படி ஒரு வாய்ப்பைப் பெற்ற நடிகை தற்போது ரொம்பவும் ஆட்டிட்யூட் காட்டி வருகிறார்.

விஜய் மேல் எனக்கு ஒரு க்ரஷ் இருக்கிறது என்று பல மேடைகளில் ஓப்பனாக சொன்ன ராஷ்மிகா இப்போது அவருடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன் பிரமாதமாக நடைபெற்றது. அந்த விழாவில் ராஷ்மிகா ரொம்பவும் ஓவராக நடந்து கொண்டதாக தற்போது பேச்சுக்கள் எழுந்து வருகிறது.

Also read: வம்சியின் மெத்தனத்தால் கடுப்பில் இருக்கும் விஜய்.. ஆசையில் மண்ணை அள்ளி போட்டுட்டாங்க!

ஏற்கனவே இந்த படத்தின் பூஜையின் போது அவர் விஜய்க்கு திருஷ்டி எடுப்பது, அவரை ஆச்சரியமாக பார்ப்பது போன்ற பல புகைப்படங்கள் வெளியானது. இதை பார்த்த பலரும் அவர் ரொம்பவும் ஓவராக பண்ணுகிறார் என்று கூறி வந்தனர். அது மட்டுமல்லாமல் அவர் அடுத்த பட வாய்ப்பையும் பிடிப்பதற்காக தான் இப்படி அட்ராசிட்டி செய்வதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அவர் நடித்து வரும் பாலிவுட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது அதில் பேசிய ராஷ்மிகா ஹிந்தி திரைப்படங்களில் தான் ரொமான்டிக் பாடல்கள் வருகிறது என்றும் தென்னிந்திய படங்களில் ஐட்டம் சாங் தான் அதிகமாக இருக்கும் என்றும் பேசி இருந்தார்.

Also read: ஒரே ட்ரெய்லரில் பயத்தை காட்டிய துணிவு அஜித்.. மொத்தத்தையும் மாத்த போட்ட திட்டம்

இது தென்னிந்திய திரை உலகில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இங்கு படங்களில் நடித்து பிரபலம் ஆனதால் தான் ராஷ்மிகாவுக்கு பாலிவுட் வாய்ப்புகள் குவிய தொடங்கியது. ஆனால் அதைப்பற்றி அவர் கொஞ்சமும் யோசிக்காமல் பாலிவுட் சென்றதும் திமிருடன் நடந்து கொள்வதாக ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அவரை வறுத்து எடுத்து வந்தனர்.

அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் அவர் ஜோடி போட்டு வருவதால் தான் இப்படி தலைகால் புரியாமல் ஆட்டம் போடுவதாகவும் ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. அந்த வகையில் தற்போது ராஷ்மிகாவின் தெனாவட்டான பேச்சால் அவருக்கு தென்னிந்திய திரையுலகில் வாய்ப்புகள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அவருடைய பேச்சு இங்கு பல முன்னணி இயக்குனர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தவளை தன் வாயால் கெடும் என்ற நிலைமையில் தான் தற்போது ராஷ்மிகா இருக்கிறார்.

Also read: விஜய்க்கு பதிலடி கொடுத்த அஜித்தின் டயலாக்.. அட இதுல இவளோ விஷயம் இருக்கா?

Trending News