Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

First heroine own flight: 70களில் சொந்தமாய் விமானம் வைத்திருந்த நடிகை.. எம்ஜிஆர் சிவாஜியை காட்டிலும் நிரம்பி வழிந்த கஜானா

First heroine own flight: 70களில் சொந்தமாய் விமானம் வைத்திருந்த நடிகை.. எம்ஜிஆர் சிவாஜியை காட்டிலும் நிரம்பி வழிந்த கஜானா

இன்றைய காலகட்டத்தில் ஹீரோயின்களில் நயன்தாரா சொந்தமாய் விமானம் வைத்திருக்கிறார். 10 முதல் 12 கோடிகள் வரை சம்பளம் பெறுகிறார். அது போக தனியாக தொழில் தொடங்கி, சமூக வலைத்தளம் என அதிலும் நிறைய பணத்தை சம்பாதிக்கிறார். 60-70 கால […]

இன்றைய காலகட்டத்தில் ஹீரோயின்களில் நயன்தாரா சொந்தமாய் விமானம் வைத்திருக்கிறார். 10 முதல் 12 கோடிகள் வரை சம்பளம் பெறுகிறார். அது போக தனியாக தொழில் தொடங்கி, சமூக வலைத்தளம் என அதிலும் நிறைய பணத்தை சம்பாதிக்கிறார்.

60-70 கால கட்டங்களில் நயன்தாராவுக்கு சவால் விடும் அளவில் ஒரு ஹீரோயின் சம்பாதித்து இருக்கிறார். ஒரே நாளில் மூன்று முதல் நான்கு படங்களில் நடித்து வந்துள்ளார். எல்லா மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 600க்கு மேல் படத்தில் நடித்திருக்கிறார்.

எம்ஜிஆர் சிவாஜியை காட்டிலும் நிரம்பி வழிந்த கஜானா

முதல் முதலாக தனி விமானம் சொந்தமாக வாங்கிய முதல் நடிகை இவர்தான். சூட்டிங் செல்வதற்காக அந்த விமானத்தை பயன்படுத்தி வந்தார். ஒரே நாட்களில் நான்கு படங்கள் என்றால் அந்த இடத்திற்கு எளிதாக செல்வதற்கு வான்வெளி பயணத்தை மேற்கொண்டு வந்தார்.

1948 இல் பிறந்து தனது 15 வது வயதில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜியை விட அதிகமாய் சம்பாதித்த நடிகை இவர்தான்.புன்னகை அரசி என அனைவராலும் அழைக்கப்படும் பெருமைக்குரியவர் கே ஆர் விஜயா. அப்போதே நயன்தாரா, திரிஷாவை விட பல மடங்கு சம்பாதித்தவர்.

15 வது வயதில் கற்பகம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து வெற்றி நாயகியாக வலம் வந்தார். தமிழ் சினிமாவை 70 களில் புரட்டி எடுத்தார். 1963ல் நடிக்க வந்தவருக்கு இன்று 75 வயதாகிறது. அவ்வப்போது தமிழ் சீரியல்களிலும் தலைகாட்டி வருகிறார்.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.