80களில் எவர்கிரீன் நடிகையாக ரவுண்டு கட்டிய நடிகை, சுமார் 30 வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்டி படைத்தவர். தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழிகளிலும் நடித்துக் கொண்டிருந்த இந்த நடிகை தன்னுடைய மார்க்கெட்டை திருமணத்திற்கு பிறகு நிலை நிறுத்திக் கொண்டார்.
இவர் கதாநாயகியாக இருந்த சமயத்தில் மற்ற நடிகைகளின் வாய்ப்புகளும் இந்த நடிகையின் கைக்கு தானாகவே வந்தது. அந்த அளவிற்கு டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டுக் கொண்டிருந்த நடிகை, மலையாள நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டார்.
Also Read: உஷாரய்யா உஷாரு.. பணத்தாசை காட்டி வலை விரிக்கும் மாடல் அழகி
ஆனால் இந்த தம்பதியர்களுக்கு குழந்தை இல்லாததால் தான் விவாகரத்து நடந்ததாகவும் சொல்லப்பட்டது. இதனால் மனம் நொந்து போன நடிகை, கணவரை பிரிந்த பின்பு டெஸ்ட்டியூப் முறையில் தனது 50வது வயதில் பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார்.
எந்த காரணத்திற்காக கணவர் தன்னை விட்டு சென்றாரோ அதை நிரூபித்து காட்டும் வகையில், தன்னுடைய மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அதிகமாக தன்னுடைய குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கும் நடிகை, இப்போது சமூகநல ஆர்வாளராகவும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
10 வருஷத்துக்கு அப்புறம் மாஜி கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படும் நடிகை, இப்போது நெருங்கிய நண்பர்களின் மூலம் தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார். இவருடைய மாஜி கணவரும் இன்னும் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால், நடிகைக்கு பிறந்த மகளுடன் நிம்மதியா மறுபடியும் குடும்பமாக வாழ பார்க்கிறார்கள். இதற்கு திரை உலகமே பாராட்டு தெரிவித்துள்ளது.
Also Read: புளியங்கொம்பை பார்த்தவுடன் சின்ன ஹீரோவை கழட்டிவிட்ட பிரபலம்.. சாபத்தால் பிரிந்த குடும்பம்