டாப் சீரியலில் மாற்றப்படும் கதாநாயகி.. கவிழும் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்

பொதுவாக அனுதினமும் பார்க்கக்கூடிய சீரியல் நடிகர் நடிகைகள், சினிமா நடிகர் நடிகைகளை விட சீக்கிரம் மக்களின் மனதில் இடம் பிடித்துவிடுவார்கள். அதைப்போல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் சின்னத்திரை ரசிகர்களிடையே தனி மவுசு. அப்படியிருக்கையில் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 லிஸ்டில் இருக்கும் ராஜா ராணி2 சீரியல் தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இதில் கதாநாயகியாக நடிக்கும் ஆலியா மானசா நிஜவாழ்க்கையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஆலியா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி1 சீரியலில் தன்னுடன் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் சஞ்சீவ் வீட்டாரின் முழு சம்மதத்துடன், ஆலியா மானசா வீட்டின் எதிர்ப்பை மீறி இவர்களது திருமணம் நடந்தது.

இவருக்கு ஏற்கனவே ஐலா என்ற இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருக்கும் ஆலியா மானசா, தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ராஜாராணி2 சீரியலில் இருந்து சில மாதங்கள் ஓய்வெடுத்து மீண்டும் நடிக்க உள்ளாராம்.

எனவே அவர் பிரசவத்திற்காக ஒரு சில மாதம் ஓய்வெடுக்க செல்வதால், இந்த சமயத்தில் நடிகை ரியா ராஜா ராணி2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறாராம். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அத்துடன் மீண்டும் ஆலியா மானசா சிறிய இடைவெளிக்குப் பிறகு ராஜா ராணி2 சீரியலில் வருகை தர உள்ளார். இருப்பினும் திடீரென்று சீரியலின் கதாநாயகியை மாற்றினால் உடனே ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள்.

ஆகையால் ஆலியா மானசா இல்லாமல் ராஜா ராணி2 சீரியல் டிஆர்பி ரேட்டிங் குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே வரும் வாரத்தில் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் கடுமையாக பாதிக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →