திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஹீரோக்கு மட்டும்தான் இன்ட்ரோ சாங்கா.? ஐஸ்வர்யா ராய் முதல் மறக்க முடியாத 5 ஹீரோயின்களின் சாங்ஸ்

சினிமாவை பொறுத்தவரையில் பொதுவாக ஹீரோவுக்கு தான் இன்ரோ சாங் வைப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக ரஜினியின் படத்திற்கு தான் அதிக இன்ட்ரோ சாங் வைக்கப்படும். நாங்களும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என ஹீரோயின்களுக்கும் இன்ட்ரோ சாங் சில படங்களில் வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஐந்து ஹீரோயின்களின் அறிமுக பாடல்களை பார்க்கலாம்.

ஐஸ்வர்யா ராய் : உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு தமிழில் இன்ட்ரோ சாங்ஸ் சில படங்களில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குரு படத்தில் நன்னாரே பாடல் ஐஸ்வர்யா ராயின் நடனத்தில் சிறப்பான அறிமுக பாடலாக அமைந்தது. அதேபோல் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும் கொஞ்சும் மைனாக்களே பாடலும் இன்ட்ரோ பாடலாக அமைந்தது.

திரிஷா : டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்த நடிகை திரிஷா. இவருக்கு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சம்திங் சம்திங் படத்தில் பூப்பறிக்க நீயும் போகாதே பாடல் அறிமுக பாடலாக எடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் கில்லி படத்தில் இடம்பெற்ற ஷாலாலா ஷாலாலா ரெட்டைவால் வெண்ணிலா பாடலும் திரிஷாவின் இன்ட்ரோ பாடலாக எடுக்கப்பட்டிருந்தது.

ஜோதிகா : ஜோதிகாவுக்கு நிறைய படங்களில் இன்ட்ரே சாங் வைக்கப்பட்டிருந்தது. அதன்படி விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு வரும் ஜோதிகா மேகம் கருக்குது என்ற பாடலுக்கு நடனமாடி இருப்பார். மேலும் சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தில் பள்ளி ஆசிரியராக இருக்கும் ஜோதிகாவுக்கு அவள் ஒரு கற்பனை என்ற பாடல் அறிமுக பாடலாக அமைந்தது.

ஷாலினி : நடிகை ஷாலினி அஜித்தை திருமணம் செய்து கொள்ள காரணமாக இருந்த படம் அமர்க்களம். இந்த படத்தில் ஷாலினிக்கு சொந்த குரலில் பாட ரொம்ப நாளா ஆசை என்ற பாடல் அறிமுக பாடலாக எடுக்கப்பட்டிருந்தது. இந்த பாடலில் மிகவும் அழகாகவும் துரு துரு பெண்ணாகவும் ஷாலினி காட்சி அளித்திருந்தார்.

கஜோல் : அரவிந்த்சாமி, பிரபுதேவா, கஜோல் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மின்சாரகனவு. ஏ ஆர் ரகுமான் இசையில் இந்த படத்தில் உருவான அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கஜோல் இன்ட்ரோ பாடலாக பூப்பூக்கும் ஓசை என்ற பாடல் எடுக்கப்பட்டிருந்தது.

Trending News