ஹீரோயின்கள் என்கூட நடிக்க தயங்குனாங்க.. கயாடு ஹீரோ சொன்ன ஷாக் தகவல்

Kayadu Lohar : இப்போது இளசுகளின் கனவு கன்னியாக இருந்து வருபவர்தான் கயாடு லோஹர். ஒரே நைட்டில் உலக ஃபேமஸான இவர் தற்சமயம் பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். பெரிய ஹீரோக்களும் தங்களது படத்தில் இவரை கமிட் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் கயாடு உடன் நடித்த ஹீரோ ஒருவர் ஆரம்பத்தில் தன்னுடன் ஹீரோயின்கள் நடிக்க தயங்கினார்கள் என்று கூறியிருக்கிறார். கயாடுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அறிமுக படமாக வெளியானது டிராகன்.

இந்த படத்தின் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக எடுத்த படம் தான் லவ் டுடே.

கயாடு ஹீரோ படத்தில் நடிக்க தயங்கிய ஹீரோயின்கள்

ஆரம்பத்தில் லவ் டுடே படத்தின் கதாநாயகிக்காக பல நடிகைகளை பிரதீப் அணுகியுள்ளார். அப்போது படத்தின் ஹீரோ யார் என்று கேட்பார்களாம். நான் தான் என்று சொன்னவுடன், டேட் இருக்கான்னு பாத்துட்டு சொல்றேன் என்று சொல்லிவிடுவார்களாம்.

அதிலும் சில நடிகைகள் இல்ல சார் நான் பெரிய ஹீரோ கூட தான் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று வெளிப்படையாக சொல்லிவிடுவார்களாம். இதுபோன்று பல நடிகைகள் தன்னை தவிர்த்ததாக பிரதீப் கூறியிருக்கிறார்.

அதன் பிறகு தான் லவ் டுடே படத்தில் இவானா நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அவரும் ட்ரெண்டிங்கில் இருந்தார். இப்போது அதே போல் தான் டிராகன் படத்தால் கயாடுக்கும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

பிரதீப்பை நிராகரித்த நடிகைகள் தற்போது கண்டிப்பாக வருந்துவார்கள். இனி வரும் காலத்திலாவது அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்ற எண்ணமும் வந்திருக்கக்கூடும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment