காரசாரம் இல்லாமல் போன வீரதீரசூரன்.. அடுத்த பார்ட்டில் தெறிக்க வரும் 3 சம்பவங்கள்

பல சங்கடங்களைத் தாண்டி வீரதீரசூரன் படம் ரிலீஸ் ஆனது. விக்ரமுக்கு இந்த படம் ஹிட் வரிசையில் இணையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படத்தின் முதல் பாதியில் சீட்டின் நுனி வரை கொண்டு சென்ற இயக்குனர் அருண் குமாருக்கு ஒரு சலாம் போடலாம். பழைய விக்ரமை காட்டியதற்கும் அவருக்கு ஒரு கைத்தட்டல்.

இந்த படத்தை பொறுத்தவரை சில விஷயங்களை மறைத்து அடுத்த பார்ட்டின் லீட் போல் அமைத்துள்ளனர். இந்த படத்தின் கிளைமாக்ஸ் என்னவோ ஒரு முடிவை போல தான் வருகிறது. ஆனால் உள்ளுக்குள் ஒரு கதாபாத்திரத்தின் இறப்பு தான் மொத்த கதையையும் நகர்த்துகிறது.

இறந்து போன விக்ரம் நண்பன் கதாபாத்திரம் பெயரைத் தான் படத்தில் தன் மகனுக்கு வைத்துள்ளார். அதை போல் வில்லன் குடும்பத்தில் தான் விக்ரம் இருக்கிறார். அவர்கள் தான் இவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். இதெல்லாம் எப்படி, ஏன், எதற்கு என்ற கேள்விகள் தான் மேலோங்கி இருக்கிறது.

அதைப்போல் ஏற்கனவே இந்த படத்தின் டீசரில் காட்டப்பட்ட பெட்டிக்கடையில் இருக்கும் விக்ரம் துப்பாக்கியை எடுத்து சுடும் காட்சிகள் இந்த பாகத்தில் இல்லை. இதுவும் அடுத்த பாகத்தில் தான் வரும். விக்ரம் யார், அவரது மனைவியாக வரும் கலை( துஷாரா விஜயன்) யார் என்பது இந்த பாகத்தில் புரியாத புதிராய் தான் இருக்கிறது.

வில்லன் குடும்பத்திற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம், விக்ரமின் நண்பன் திலீப் யார், விக்ரம் கை குழந்தையோடு இருக்கும் துஷாரா விஜயனை ஏன் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். இப்படி பல கேள்விகளுக்கு இந்த பாகத்தில் விடை கிடைக்கவில்லை.

Leave a Comment