புதன்கிழமை, ஜனவரி 8, 2025

நயன்தாரா சம்பளதிற்கு ஆப்பு.. அடிமாட்டு விலைக்கு நெட்பிளிக்ஸ் கேட்டதால் அடிபணியும் நயன்தாரா

Highest paid South Actress Lady super star Nayanthara and her flop movies: தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாரா கடின உழைப்பாலும் தனி திறமையாலும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் 20 வருடங்களுக்கு மேலாக நீங்காத இடத்தை பிடித்து வருகிறார். மேலும் படத்திற்கு 10 கோடி என அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

2005 ஆம் ஆண்டு ஹரியின் இயக்கத்தில் வெளிவந்த ஐயா படத்தில் தமிழில் நடிகையாக அறிமுகமானார் நயன்தாரா. இவரின் திரை வாழ்வு சற்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே இருந்தன. தொடக்கத்தில் ஆயிரங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நயன்தாராவிற்கு பல ஹிட் படங்களின் மூலமாக சம்பளம் மடங்குகளாகவே உயர்ந்தன.

கடந்த சில ஆண்டுகளாக முன்னணி நடிகர்களுடன் மெகா பட்ஜெட் படங்களில் கைகோர்க்க அவரது சம்பளமும் கோடிகளாக உயர்ந்தது. சமீப காலமாக நயன்தாரா, நெற்றிக்கண், கணெக்ட்,O2, காத்து வாக்குல ரெண்டு காதல், என தொடர்ந்து தோல்வி படங்களாகவே கொடுத்து வந்தார். இதற்கு காரணம் கதையா விதியா என தெரியாத போதிலும் சம்பள விஷயத்தில் கறாராக இருக்கிறார் நயன்தாரா.

Also Read: தொடர்ந்து 11 படங்கள் பிளாப் கொடுத்த நயன்தாரா.. பட்டத்தை பறிக்க போகும் அந்த நடிகை

அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் இறைவனில் இணைந்த நயன்தாரா இப்படத்திற்காக 20 நாள் மட்டுமே கால்சீட் கொடுத்தாராம். ஆனால் சம்பளமோ ஐந்து கோடி வாங்கினாராம். இப்படமும் சரியாக போகவில்லை.

நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாராவிற்கு சமீபத்தில் வெளியான அன்னபூரணி மொத்தமாக 85 லட்சம் மட்டுமே வசூல் செய்து முதலுக்கு மோசம் செய்தது.  இதன் ஓ டி டி உரிமையை நெட்பிளிக்ஸ் மிகவும் குறைந்த விலைக்கு கேட்டு தயாரிப்பாளர் தலையில் துண்டு போட வைத்துள்ளனர்.

அட்லியின் இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்த ஜவான் படம் 2000 கோடியே வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டது.  இப்படத்திற்காக நயன்தாரா பத்து கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

அதாவது 2000 கோடி வசூல் செய்யும் படத்தில் பத்து கோடி சம்பளம் பெரியதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் படத்தின் வசூலே ஒரு கோடி தாண்டாத நிலையில், நான் 10 கோடி கொடுத்தால் மட்டும்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பது அவருடைய கேரியருக்கும் நல்லதல்ல படங்களுக்கும் நல்லதல்ல.

Also Read: திரிஷா நயன்தாராவை ஓவர் டேக் பண்ணும் நடிகை.. லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு வரும் குழாயடி சண்டை

Trending News