
Hip-Hop Adhi : சுந்தர்சியின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் ஹிப் ஹாப் ஆதி. தன்னுடைய தனித்துவமான இசையால் மிகக் குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
பெரும்பாலும் இப்போது உள்ள இசையமைப்பாளர்களுக்கு நடிகர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது. அவ்வாறு தான் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக படங்களில் நடித்து வந்தார்.
அதே எண்ணத்தில் தான் ஹிப் ஹாப் ஆதியும் கதாநாயகனாக நடித்தார். அவ்வாறு அவர் நடித்த முதல் படம் தான் மீசைய முறுக்கு. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து கதாநாயகனாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
பட வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ஹிப் ஹாப் ஆதி
ஆனால் அந்த படங்கள் தொடர் தோல்வியை தான் சந்தித்து வருகிறது. கடைசியாக ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான உலகப் போர் படம் வந்த சுவடே தெரியவில்லை. இவ்வாறு அவருக்கு அடி மேல் அடி விழுந்து வருகிறது.
மேலும் இந்த படத்தை அவரே தயாரித்து இருந்தார். இதனால் இப்போது அவரது கஜானாவும் காலி ஆகிவிட்டது. அவரே இயக்கி, தயாரித்து சில படங்களில் நடித்து வந்த நிலையில் இப்போது போதுமான நிதி வசதியும் அவரிடம் இல்லை.
அதோடு தொடர் தோல்வியால் அவருக்கு இப்போது பட வாய்ப்புகளும் வராமல் உள்ளது. இசையில் கொடி கட்டி பறந்திருப்பவர் கதாநாயகனாக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசையால் இப்போது இருப்பதையும் இழந்துள்ளார்.