
PT Sir: ஐசரி கணேஷ் இயக்கத்தில் கார்த்திக் வேணுகோபால் இயக்கியிருந்த PT சார் கடந்த வாரம் வெளியானது. ஹிப் ஹாப் ஆதி, அனிகா, தியாகராஜன், பிரபு என ஏகப்பட்ட பிரபலங்கள் இதில் நடித்திருந்தனர்.
படு பயங்கரமாக ப்ரமோஷன் செய்யப்பட்ட இப்படம் முதல் நாளிலேயே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. அதன்படி இப்படம் முதல் நாளில் 70 லட்சம் வரை வசூலித்திருந்தது. தொடர்ந்து இரண்டாம் நாளில் 1.15 கோடியும் மூன்றாவது நாளில் 1.36 கோடியும் வசூல் ஆகி இருந்தது. நான்காவது நாளான நேற்று 66 லட்சம் வரை வசூலித்திருந்தது.
இப்படியாக இந்த நான்கு நாட்களில் PT சார் படத்தின் வசூல் 3.87 கோடிகளாக இருக்கிறது. ஆனால் படத்தின் மொத்த பட்ஜெட் 10 கோடியாகும். அதை வைத்து பார்க்கும் போது இன்னும் பாதிக்கிணறை கூட இவர்கள் தாண்டவில்லை.
Veeran
Aranmanai 4
PT sir
Alambana
அதனாலேயே ஹீரோ ஹிப் ஹாப் ஆதி ஒவ்வொரு ஊராக சென்று பிரமோஷன் செய்து வருகிறார். தூத்துக்குடி, மதுரை போன்ற இடங்களில் தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை சந்திக்கும் வீடியோவும் வெளியாகி கொண்டிருக்கிறது.
ஹிப் ஹாப் ஆதியின் PT சார் ப்ரமோஷன்
அதே சமயம் இதை ஒரு ஜாலியாக எடுத்துக்கொண்டு இந்த குரூப் செய்யும் அலப்பறையும் ஒரு பக்கம் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் புறாக்கறி பொரிச்ச பரோட்டா சீ ஃபுட் நல்லா இருந்தது என இந்த டீம் ஜாலி செய்து வருகிறது.
படத்தின் வசூல் லாபமோ நஷ்டமோ நமக்கு எல்லாம் ஜாலிதான் என இவர்களின் ப்ரோமோஷன் ஒரு பக்கம் ரகளையாக இருக்கிறது. இதில் தயாரிப்பாளர் தான் போட்ட காசை எடுத்து விட வேண்டும் என தவித்துக் கொண்டிருக்கிறார்.
Singapore saloon
Joshua imai pol kaakha
PT sir
Genie
இதற்கு முன்பாக இவருடைய தயாரிப்பில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன் சுமாரான கலெக்ஷனை பெற்றது. ஆனால் அதன் பிறகு வெளியான ஜோஸ்வா இமைப்போல் காக்க வந்த வேகத்திலேயே தியேட்டரை விட்டு ஓடி நஷ்டத்தை கொடுத்தது.
இதை அடுத்து ஜெயம் ரவியின் ஜீனி படத்தை இவர் தயாரித்து வருகிறார். இந்த படம் போஸ்டரிலேயே கவனம் பெற்ற நிலையில் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஹிப் ஹாப் ஆதியின் முந்தைய படமான வீரன் பெரிய அளவில் வெற்றியெல்லாம் பெறவில்லை. அடுத்ததாக இவருடைய இசையில் ஆலம்பனா வர இருக்கிறது. ஆனால் ஹீரோவாக இவர் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை.