ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் ஏ ஆர் கே சரவணன் இயக்கியிருக்கும் வீரன் இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ளது. சூப்பர் ஹீரோ என்ற ஒரு மையக்கருவை வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் ரிலீசுக்கு முன்பே பெரும் ஆவலை தூண்டி இருந்தது. அதற்கேற்றார் போல் வெளிவந்த ட்ரெய்லரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
![veeran-adhi-movie](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/06/veeran-adhi-movie.jpg)
அதைத்தொடர்ந்து இன்று வெளியாகி உள்ள இப்படத்திற்கு இப்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் ஆதியின் நடிப்பு நாளுக்கு நாள் முன்னேறி உள்ளதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கடந்த சில பட தோல்விகளால் துவண்டு போயிருந்த இவருக்கு இப்படம் நிச்சயம் பேர் சொல்லும் படமாக இருக்கும் எனவும் வாழ்த்தி வருகின்றனர்.
Also read: வீரன் படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு இப்படி ஒரு அநீதியா.. செய்தியாளர்களுக்கு கொடுத்த செம டோஸ்
அந்த வகையில் காவல் தெய்வம் கலந்த சூப்பர் ஹீரோ கான்செப்ட் படம் பார்க்கும் ஆடியன்ஸை மிகவும் கவர்ந்துள்ளது. அதிலும் நகைச்சுவை கலந்து கொடுக்கப்பட்ட திரைக்கதையும் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
![veeran-review](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/06/veeran-review.jpg)
ஹீரோவுக்கு அடுத்தபடியாக வினய்யின் நடிப்பும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து விஷுவல் காட்சிகளும், பின்னணி இசையும் திரைக்கதைக்கு சுவாரஸ்யம் சேர்த்திருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
![veeran-movie](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/06/veeran-movie.jpg)
Also read: சூப்பர் ஹீரோவாக மாறிய ஹிப்ஹாப் ஆதி.. ட்ரெண்டாகும் வீரன் ட்ரெய்லர்
இப்படி சோசியல் மீடியா முழுவதுமே வீரன் திரைப்படத்தின் பாசிட்டிவ் கருத்துக்களால் நிறைந்திருக்கிறது. எப்போதுமே இது போன்ற ஃபேண்டஸி படங்களுக்கு ரசிகர்கள் தங்கள் முழு ஆதரவை கொடுத்து விடுவார்கள். அது இந்த படத்திலும் உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே இப்படம் மலையாள படமான மின்னல் முரளியின் காப்பி என்று பலரும் கூறி வந்தனர்.
![veeran-adhi](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/06/veeran-adhi.jpg)
இப்படம் அப்படி கிடையாது என்று பட குழு தெளிவு படுத்தியிருந்த நிலையில் தற்போது படத்தை பார்த்த அனைவரும் இயக்குனரையும், ஹீரோவையும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஹீரோவாக மாறி இருக்கும் ஆதிக்கு இந்த வீரன் அடுத்த கட்டத்திற்கான ஒரு படியாக அமைந்திருக்கிறது.
![adhi-veeran](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/06/adhi-veeran-1.jpg)
Also read: ஸ்பைடர் மேனாக மாறிய ஹிப் ஹாப் ஆதி.. ட்ரெண்டாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்