வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூப்பர் ஹீரோவாக மாறிய ஹிப்ஹாப் ஆதி.. ட்ரெண்டாகும் வீரன் ட்ரெய்லர்

வித்தியாசமான கற்பனை கதைகளுக்கு இப்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. அதனால் பலரும் ஃபேண்டஸி கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி ஒரு கதையுடன் வீரனாக களம் இறங்கி இருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. சூப்பர் ஹீரோ கதை போல் தெரிந்தாலும் ட்ரெய்லர் முழுக்க காமெடி மற்றும் ஆக்சன் பட்டையை கிளப்புகிறது. ஆரம்பத்திலேயே லேசர் பவர் டெக்னாலஜி மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தான் செயல்படுத்த வேண்டும் என்ற வசனத்தோடு தொடங்குகிறது.

Also read: பக்கா கூட்டணியுடன் களமிறங்கும் விஜய்.. அதிரடியாய் வெளியான தளபதி 68 அப்டேட்

அதைத் தொடர்ந்து அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளும் வில்லன் கூட்டம், அதை முறியடிக்க வரும் ஹீரோ என ட்ரெய்லர் முழுவதும் விறுவிறுப்பை கூட்டியுள்ளது. அதற்கேற்றார் போல் பின்னணி இசையும், விஷுவல் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளது.

மேலும் வில்லனாக வரும் வினய் வழக்கம் போல இதிலும் கொடூரமானவராக வருகிறார். அவருடைய திட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆதி வீரனாக மாறுவதும், அதற்கு துணையாக இருக்கும் கருப்பு குதிரை என திரில்லர் காட்சிகளும் ஆர்வத்தை கூட்டி உள்ளது.

Also read: உண்மை கதையோடு களமிறங்கும் சூப்பர் ஸ்டார்.. சம்பவத்திற்கு தயாராகும் தலைவர் 170

அந்த வகையில் இந்த சூப்பர் ஹீரோ வரும் ஜூன் 2 ஆம் தேதி ரசிகர்களை காண வருகிறார். தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் ஆதி இப்படத்தில் தன் முழு திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது இதில் நன்றாக தெரிகிறது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் இந்த வீரன் ட்ரெய்லர் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Trending News