வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நடிகைகளால் காற்றில் பறந்த அப்பாவின் மானம்.. கொஞ்சம் கூட கமல் பேச்சை கேட்காத வாரிசுகள்

HEIR ACTRESSES : திரைப்பட பிரபலங்கள் தங்கள் வாரிசுகளையும் நடிக்க வைப்பது சகஜம் தான். அந்த வகையில் சிவாஜி காலத்தில் இருந்து வாரிசு நடிகர்கள், நடிகைகள் தங்கள் தனித்திறமையை தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் காண்பித்து வெற்றிப் பெற்று வருகின்றனர். ஆனாலும் சில பிரபலங்களின் பெண் பிள்ளைகள் இவர்களின் பெயரை மொத்தமாக காற்றில் பறக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் கொஞ்சம் கூட அப்பா பேச்சை கேட்காத நடிகைகளை பற்றிய பதிவு.

வனிதா விஜயகுமார் : விஜயகுமார் மற்றும் மஞ்சுளா விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா விஜயகுமார் தளபதி விஜயின் சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சில படங்களில் மட்டுமே நடித்த வனிதா பட வாய்ப்புகள் அதிகம் இன்றி சில காலம் காணாமல் போயிருந்தார். ஆனால் தற்சமயம் வைரலுக்கு பெயர் போன வனிதா வைரல் என்றாலே வனிதா என்றாகி விட்டார். முதலில் நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் இருந்த நிலையில் அவரை விட்டுப் பிரிந்தார். அதனை அடுத்தடுத்து இரண்டு திருமணங்களை செய்து கொண்டார். இதுவும் விவாகரத்தில் முடிய பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் வந்து பிரபலமானார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் வனிதா மறுபடியும் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ததாக தகவல் வெளிவந்தது. அதனை இல்லை என்று மறுத்த வனிதா ஓர் ஆண்டு காலம் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். இப்பொழுது பிரிந்து விட்டோம் என்று கூறியுள்ளார்.

Also Read : பிக்பாஸ் பிரபலத்திற்கு ஜோடியாகும் வனிதா விஜயகுமார்.. மீண்டும் பத்த வச்ச வத்திக்குச்சி

ஸ்ருதிஹாசன் : நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளாக தமிழ் திரை உலகில் ஏழாம் அறிவு படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர் இவர். கஞ்சா அடிக்கும் பழக்கம் கஞ்சா அடிக்கும் பழக்கம் குடிப்பழக்கம் என்பது எனக்கு இல்லை அந்த வாழ்க்கை தான் தற்சமயம் வாழ்ந்து வருகிறேன் என்று கூறியுள்ளார். அப்பாவின் பெயர் சொல்லும் பெண் பிள்ளையாக வளம் வருவார் என்றால் ஏகப்பட்ட பாய் ஃபிரண்ட்ஸ் உடன் வலம் வருகிறார் ஸ்ருதிஹாசன். சாந்தனு ஹசாரிக்கா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு தன் காதலருடன் இருக்கும் அந்தரங்க போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களுக்கு அட்டாக் வர வைத்தார். ரசிகர்கள் கேட்கும் எந்த ஒரு மோசமான கேள்விகளுக்கும் கூலாக பதில் கூறி வாய் அடக்க வைத்து வருவார் ஸ்ருதிஹாசன்.

ராதிகா : நடிகவேள் எம். ஆர். ராதாவின் 5வது மனைவி மற்றும் இலங்கை பெண்ணான கீதா என்பவருக்கும் பிறந்தவர் நடிகை ராதிகா. தமிழில் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமாகி சிறந்த நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் ராதிகா. ஆனால் அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த பெண் என்பது போல் மூன்று நான்கு திருமணங்களை செய்தவர் ராதிகா. 1985 ஆம் ஆண்டு நடிகர் மற்றும் இயக்குனர் பிரதாப் போத்தனை திருமணம் செய்து ஒரே ஆண்டில் பிரிந்தார். பின்னர் 1990 இல் லண்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ரயானே என்ற மகள் இருக்கிறார். இருவருக்கும் விவாகரத்தான நிலையில் படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் பிஸியாக இருந்தார். இந்த நிலையில் ராதிகா திடீர் என்று 2001 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார்.

Also Read : புலம்பித் தவிக்கும் ஸ்ருதிஹாசன்.. மருந்து கொடுத்து காப்பாற்றுவாரா கமலஹாசன்

அதிதி சங்கர் : பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகளான நடிகை அதிதி சங்கர் விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மகள் நல்ல டாக்டராக வருவார் என்று எண்ணிய இயக்குனர் ஷங்கருக்கு பல்பு தான் கிடைத்தது. அப்பாவின் பேச்சை கேட்காத அதிதிஷங்கர் படங்களில் நடிக்கத்தான் போகிறேன் என்று விருமன் படத்தில் அறிமுகமானார். பிறகு இவர் மாவீரன் படத்தில் நடித்தது பெரிதாக சொல்வதற்கு இல்லை என்றாலும் அப்பாவிற்கு தெரியாமல் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அதிதி ஷங்கர்.

வரலட்சுமி : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்புவுடன் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். விஷாலுடன் சண்டக்கோழி 2 படத்தில் நடிப்பதற்கு முன்பே இருவருக்கும் நட்பானது. படங்களில் நடிப்பதற்கே முதலில் நோ சொன்ன சரத்குமாரை எதிர்த்து பல படங்களில் நடித்தார் வரலட்சுமி. அதிலும் நடிகர் சங்கத்தின் தேர்தலின் போது ஏற்பட்ட மோதலில் சரத்குமார் மற்றும் விஷால் பரம எதிரிகள் போலாகினர். ஆனாலும் வரலட்சுமி கிள் என்றால் அது விஷால் தான் என்று கூறியுள்ளார்.

Also Read : நடிக்கிற படத்தில் முதல் அக்ரீமெண்ட்டே இதுதானா.? மாவீரன் பட பூஜையிலேயே பிட்டு போட்ட அதிதி சங்கர்

Trending News