திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதி 68ல் விஜய் நடிக்கப் போகும் கேரக்டர் இதுதான்.. நான்கு வருடத்திற்கு பின் மீண்டும் தயாராகும் சம்பவம்

Thalapathy 68: லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் இந்த படத்தின் ரிலீஸுக்கு முன்பே அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தை குறித்த அப்டேட் ஒவ்வொரு நாளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிப்பதற்காக தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு கடந்த 2019 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில்  விஜய் தந்தை, மகன் போன்ற இரட்டை வேடத்தில் நடித்து அசத்தினார்.

Also Read: தளபதி 68 லேட்டஸ்ட் அப்டேட்.. பிகில் பாணியை கையில் எடுக்கும் வெங்கட் பிரபு

அதேபோன்று இப்போது நான்கு வருடம் கழித்து தளபதி 68 படத்திலும் அப்பா, மகன் போன்ற இரட்டை வேடத்தில் அடுத்த சம்பவம் செய்யப் போகிறார். இந்த அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

மேலும் இந்த படத்தில் அப்பா கேரக்டரில் நடிக்கும் விஜய், கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க உள்ளார். அதேபோல் மகனாக நடிக்கும் விஜய், ரா ஏஜென்ட்(Raw Agent) வேடத்தில் எதிரும் புதிருமாக நடிக்கப் போகின்றனர். இதனால் பிகில் படத்தை விட இந்தப் படம் தளபதி ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையப்போகிறது.

Also Read: அஜித், விஜய்யிடம் தோற்றுப் போய் நிற்கும் ரஜினி.. இதுல அடுத்த படம் வேற என்ன நிலைமை ஆகப்போகுதோ?

மேலும் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதற்காக தற்போது லாஸ் ஏஞ்சலில் விஜய்க்கு 3டி விஎஃப்எக்ஸ் ஸ்கேன் எடுக்க உள்ளனர். இதற்காக விஜய் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல உள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

முன்பு அஜித்துடன் மங்காத்தா படத்தில் மாஸ் ஹிட் கொடுத்த வெங்கட் பிரபு, இப்போது விஜய்யை வைத்து தளபதி 68 படத்தில் தரமான சம்பவத்தை செய்யப் போகிறார். ஆகையால் லியோ படத்தை விட தளபதி 68 படத்தின் அப்டேட் தான் தற்போது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்கிறது.

Also Read: 6 வாரத்திற்கு முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த லியோ.. சூடு பிடிக்கும் டிக்கெட் முன் பதிவு

Trending News