செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விறகுகடை முதலாளி டு விஜய்யின் ரைட் ஹேண்ட்.. பலரும் அறியாத புஸ்ஸி ஆனந்த் வரலாறு

Bussy Anand – Vijay : புஸ்ஸி ஆனந்த் என்ன சொன்னாலும் விஜய் தலையாட்டுகிறாரே, அந்த அளவுக்கு இவருக்கு என்ன செல்வாக்கு என பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். விறகு கடை முதலாளியாக இருந்த இவர் விஜய்யின் ரைட் ஹேண்டாக மாறியது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

விறகுகடை வியாபாரம் செய்து வந்த புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியில் கண்ணன் என்பவரால் புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். சுமார் 5000 ஓட்டுகள் அடங்கிய அந்த தொகுதியில் 2500 ஓட்டுகள் வாங்கி புஸ்ஸி வெற்றி பெற்றார். அதன் பின்பு இரண்டு முறை தேர்தலில் போட்டியிடும் தோல்வியை தான் தழுவினார்.

ஆனால் முன்னாள் எம்எல்ஏ என்ற அந்தஸ்துடன், விஜய்யின் ரசிகர் மன்றத்தின் கிளை தலைவர் என்ற பொறுப்பை ஏற்றார். அதன் பின்பு ரசிகர் மன்றத்தின் தலைவர் பொறுப்பு விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரால் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு விஜய் மற்றும் சந்திரசேகர் இடையே பிரச்சனை ஏற்படுவதற்கு புஸ்ஸி ஆனந்த் தான் காரணம் என்று கூறப்பட்டது.

Also Read : புஸ்ஸி ஆனந்தை விஜய் கண்மூடித்தனமாக நம்புவதற்கு முக்கிய காரணம்.. ஆடு பகை குட்டி உறவா?

மேலும் விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் என அபரிவிதமான வளர்ச்சியடைந்தார். இந்த வளர்ச்சிக்கு பல முறை கேடுகளில் இவர் ஈடுபட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து புஸ்ஸி ஆனந்தி மாமா தான் பாண்டிச்சேரியில் எஸ்பியாக இருந்த விஜயகுமார்.

இவரின் மூலம் அமைச்சராக இருந்த நமச்சிவாயத்தின் நட்பு கிடைக்க அதன் மூலம் முதல்வர் ரெங்கசாமி இடமும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் புஸ்ஸி ஆனந்த். அதோடு மட்டுமல்லாமல் அமித்ஷாவின் அறிமுகமும் புஸ்ஸி அனந்த்-க்கு கிடைக்கிறது. இவ்வாறு பாஜகவில் முக்கிய தலைவர்களை நெருக்கமாகி கொண்டுள்ளார் புஸ்ஸி ஆனந்த்.

அதோடு தளபதி விஜய் சந்திக்க வேண்டும் என்றால் இவருடைய அனுமதி தான் தேவை. விஜய் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் திமுக ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் பாஜகவால் ஓட்டுக்களை பெற முடியாது. இதற்காக சினிமாவில் செல்வாக்கு உள்ள நடிகர்களை அரசியலில் இறக்க வைக்க பாஜக திட்டம் தீட்டி இருந்தது.

ஆனால் ரஜினி தனக்கு அரசியலே வேண்டாம் என்று பின்வாங்கி விட்டார். இப்போது விஜய் அரசியலுக்கு நுழைவதால் கண்டிப்பாக வாக்குகள் சிதறும் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் மூலம் பாஜகவின் ஆதிக்கம் தமிழ்நாட்டிலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகையால் புஸ்ஸி ஆனந்த் மூலமாக விஜய்யை களம் இறக்கியுள்ளது பாஜக என அரசியல் பிரபலங்கள் கூறி வருகின்றனர்.

Also Read : அல்லக்கைகளை நம்பி இறங்காதீங்க விஜய்.. புஸ்ஸி வைத்து தளபதிக்கு K ராஜன் வைத்த கொட்டு – வீடியோ

Trending News