சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் மாதிரி தலைவர் 171 காப்பி அடிக்கப்பட்ட படம்.. 5 பார்ட்டு படத்தில் இருந்து உருவிய லோகேஷ்

Lokesh and Thalaivar 171: லோகேஷ் எடுக்கக்கூடிய படங்களை பொருத்தவரை இதுதான் கதையாக இருக்கும் என்று படம் பார்த்து முடிக்கிற வரை நிர்ணயிக்க முடியாத அளவிற்கு வித்தியாசமாக இருக்கும். அதிலும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு அதிரடியாக இருக்கும்.

அதனால் தான் என்னமோ லோகேஷ் படம் மக்களிடம் நல்ல ரீச் ஆகி வெற்றி பெற்று விடுகிறது. அந்த வகையில் தற்போது ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை உருவாக்கப் போகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.

அதில் ரஜினியின் இரு கைகளையும் கை கடிகாரத்தால் கட்டப்பட்டு இருந்தது. அதனால் இப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு வர ஆரம்பித்துவிட்டது. மேலும் வருகிற 22ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசல் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதனால் இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. எப்படி விக்ரம் மற்றும் லியோ படத்தின் டீசர் ரசிகர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதேபோல் தலைவர் 171 டீசரமும் படு மாஸாக இருக்க வேண்டும் என்று லோகேஷ் கவனமாக செதுக்கி கொண்டு வருகிறார்.

ஹாலிவுட் படத்தில் இருந்து உருவிய லோகேஷ்

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் கதை எந்த மாதிரியானதாக இருக்கும் என்று சில தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த THE PURGE என்ற ஹாலிவுட் படத்தின் ஐந்தாவது பாகத்தில் இருந்து உருவிய கதையை தான் லோகேஷ் எடுத்து வருவதாக தெரிகிறது.

ஏற்கனவே இப்படித்தான் லியோ படத்தையும் A HISTORY OF VIOLENCE படத்தில் இருந்து அடிக்கப்பட்ட காப்பி கதையாக தெரிந்தது. அதே மாதிரி தலைவர் 171 படமும் ஹாலிவுட் படத்தில் இருந்து தான் எடுத்து ரஜினியை வைத்து ஒரு சம்பவத்தை லோகேஷ் செய்யப் போகிறார்.

ஆனால் லியோ சொதப்பின மாதிரி இல்லாமல் இருக்க வேண்டும் என்று ரஜினி ரொம்பவே ஸ்ட்ரிக்டா சொல்லி இருக்கிறார். அதனால் லோகேஷ் யாரையும் நம்பி பொறுப்பை ஒப்படைக்காமல் ஆரம்பித்ததில் இருந்து கடைசி வரை நின்னு வெற்றியை கொடுக்க வேண்டும் என்று பம்பரம் போல செயல்பட்டு வருகிறார்.

Trending News